Rajya Sabha election 2026: If she wins, she will be India's first LGBTQ+ MP! Who is this Maneka Gurusamy? source: google
இந்தியா

வெற்றி பெற்றால் இந்தியாவின் முதல் LGBTQ+ : ராஜ்யசபாவில் கால்பதிக்கும் உறுப்பினர்! யார் இந்த மேனகா குருசாமி?

Rajya Sabha election 2026 : கடந்த 2018 ஆம் ஆண்டு, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377, தன்பாலின சேர்க்கை குற்றமாகக் கருதப்படும் சட்டத்தை எதிர்த்து வாதிட்டவர்களில் மேனகா குருசாமியும் ஒருவர்.

S Kavitha

Rajya Sabha election 2026 :

தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாகவுள்ள முப்பத்து ஏழு மாநிலங்கலவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் மாதம் 16 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில்

அதன்படி மேற்கு வங்கத்தில் 5 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.

வேட்பாளர் பட்டியல்

அந்த பட்டியலில், உச்ச நீதிமன்ற மூத்த வழிக்கறிஞரும், தன்பாலின ஈர்ப்பாளரருமான மேனகா குருசாமி, முன்னாள் மாநில டிஜிபி ராஜீவ் குமார், சட்டப்பேரவை உறுப்பினரான பாபுல் சுப்ரியோ, டோலிவுட்டின் பிரபல நடிகையான கோயல் மாலிக் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

கவனம் பெறும் மேனகா குருசாமி

இந்த 4 மாநிலங்களவை உறுப்பினர்களில் மேனகா குருசாமி அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார். ஏனென்றால் , இந்த தேர்தலில் மட்டும் மேனகா குருசாமி வெற்றி பெற்றால் இந்தியாவின் முதல் LGBTQ+ பராளுமன்ற உறுப்பினர் என்ற வரலாறு படைப்பார்.

யார் இந்த மேனகா குருசாமி

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஹார்வர்ட் சட்டப் பள்ளி மற்றும் தேசிய சட்டப் பள்ளி இந்தியப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மேனகா குருசாமி சட்டப் படிப்பை முடித்துள்ளார். இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்.

2017 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை நியூயார்க், கொலம்பியாவில் பி.ஆர்.அம்பேத்கர் ஆராய்ச்சி அறிஞராகவும், விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

2019 ஆம் ஆண்டின் டைம்ஸ் பத்திரிகையின் உலகின் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் மேனகா குருசாமியின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377, (இயற்கைக்கு மாறான உறவு) தன்பாலின சேர்க்கை குற்றமாகக் கருதப்படும் சட்டத்தை எதிர்த்து வாதிட்டவர்களில் மேனகா குருசாமியும் ஒருவர்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இயற்கைக்கு எதிரான உறவில் இருந்து தன்பாலின சேர்க்கையை நீக்கி உத்தரவிட்டது. இதன் பிறகு தான் இந்தியாவில் தன்பாலினத்தைச் சேர்ந்தவர்கள் உறவானது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. இதை LGBTQ+ வினருக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகப் பார்க்கப்பட்டது.

உறவு குறித்தான பகிரங்க அறிவிப்பு

இதைத்தொடர்ந்து 2019 ஆம் ஆண்டும் ஒரு நேர்காணலின் போது சக பெண் வழக்கறிஞரான அருந்ததி கட்ஜுவுடனான உறவை பகிரங்கமாக அறிவித்து அனைவரின் கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றார்.

மேனகா குருசாமி வாதிட்ட வழக்குகள்

இதைத்தொடர்ந்து அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கு, கல்வி உரிமை சட்டம் தொடர்பான வழக்குகள், தன்பாலின திருமண அங்கீகாரம் தொடர்பான வழக்குகள் என பலதரப்பட்ட வழக்குகளில் வாதாடி கவனம் பெற்றுள்ளார்.

வெற்றி வேட்பாளராக

தற்போது மாநிலங்களவைத் தேர்தலிலும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுளார். கிட்டத்தட்ட வெற்றி வேட்பாளர் இவர் தான் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தியாவின் முதல் LGBTQ+ பராளுமன்ற உறுப்பினர்

எனினும் உறுதியாக வெற்றி வேட்பாளராக மேனகா குருசாமி பாராளுமன்றத்திற்குள் நுழைந்தால் இவர் தான் இந்தியாவின் முதல் தன்பாலின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையைப் பெருவார்.