Rameswaram Express Train Will Operate To Tirupati Weekly Four Times here full Details in Tamil Source : Google
இந்தியா

இராமேஸ்வரம் to திருப்பதி குட்நியூஸ் : இனி வாரம் நான்கு ரயில்கள்!

ராமேஸ்வரம் மற்றும் திருப்பதி இடையே வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் இனி வரும் நாட்களில் நான்கு நாட்களுக்கு இயக்கப்படப் போவதாக மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Baala Murugan

அஸ்வினி வைஷ்ணவ் அறிக்கை

Rameswaram Express To Tirupati Runs Four Times Weekly : இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இதுவரை வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே ராமேஸ்வரம் டூ திருப்பதி ரயில் இயங்கி வந்த நிலையில், தற்போது பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று வாரத்தில் நான்கு நாட்கள் ரைளை இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று, இந்திய ரயில்வே வாரியம் பக்தர்களின் இந்த கேரிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

4 நாட்கள் ரயில் இயக்கப்படும்

இந்த ரயில் எண்கள் 16779 (திருப்பதி - ராமேஸ்வரம் - TPTY RMM EXP) மற்றும் 16780 (ராமேஸ்வரம் - திருப்பதி - RMM TPTY EXP) ஆகும். இந்த ரயில்கள் தற்போது ஞாயிற்றுக்கிழமை , வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்தும், அதேசமயம் திருப்பதியில் திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் இருந்தும் இயக்கப்பட்டு இருந்த நிலையில், இனி வரும் காலங்களில் கூடுதலாக ஒரு நாள் சேர்க்கப்பட்டு வாரம் நான்கு நாட்களுக்கு இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

மேலும் கூடுதல் நாள் எந்த கிழமைகளில் இயக்கப்படும் என்பது குறித்த தகவல் கூடிய விரைவில் ரயில்வே வாரியத்தாள் அறிவிக்கப்படும். இந்த ரயில் சுமார் 808 முதல் 846 கி.மீ. தூரத்தை 17-18 மணி நேரத்தில் கடக்கிறது. அதுமட்டுமின்றி இந்த ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 16:55க்கு கிளம்பி, திருப்பதிக்கு மறுநாள் காலை 10:10க்கு சென்றடையும். அதேபோல் இந்த ரயில் திருப்பதி இருந்து காலை 11:55கக்கு கிளம்பி, மறுநாள் அதிகாலை 04:35க்கு ராமேஸ்வரம் சென்றடையும்.

பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் வழங்கப்படும்

இந்த ரயில் ராமேஸ்வரம், மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், கும்பகோணம், சிதம்பரம், திருப்பதிரிபுலியூர், விழுப்புரம், திருவண்ணாமலை, போளூர், ஆர்னி சாலை, வேலூர் கான்ட், காட்பாடி, பகலா, திருப்பதி உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நிற்கிறது. ராமநாதசுவாமி கோயில் மற்றும் திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு இது பெரும் வசதியாக அமையும்.

இதற்கான கட்டணம் ஸ்லீப்பர் பிரிவில் ரூ.450, மூன்றாம் ஏசி பிரிவில் ரூ.1190 கட்டணமாக வசூலிக்கப்படும். பயணிகள் IRCTC இணையதளம் அல்லது ரயில்வே செயலியில் புதுப்பிக்கப்பட்ட அட்டவணையை சரிபார்த்து டிக்கெட் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்த ரயிலின் பயணிகள் வசதிக்காக தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைப்பதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.