Re-polling is underway in 15 polling stations in West Bengal google
இந்தியா

West Bangal : தேர்தல் முறைகேடு புகார், 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு! : பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்...

மேற்கு வங்கத்தில் 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Kannan

மேற்கு வங்க தேர்தல்

West Bengal Holds Repolling At 15 Booths After Complaints : மேற்கு வங்க சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் முதற்கட்ட தேர்தல் கடந்த 23ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 29ம் தேதியும் நடைபெற்றது. தேர்தலில் சராசரியாக 92.93 சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்குச்சாவடிகளில் முறைகேடு

2ம் கட்ட தேர்தலில் ஒருசில வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடைபெற்றன. திரிணாமுல் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் நெருங்கிய ஆதரவாளர் ஜஹாங்கீர்கான் தெற்கு 24 பர்கானஸ் மாவட்டம் டைமண்ட் ஹார்பர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஸ்டிக்கர்

இந்த தொகுதிக்கு உள்பட்ட பல்டா நகரில் உள்ள வாக்குச்சாவடியில் தேர்தலின்போது வாக்குப்பதிவு எந்திரத்தில் பாஜக வேட்பாளரின் பெயரில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.

மேலும், பாஜக வேட்பாளருக்கு வாக்கு அளிக்க முடியாத வகையில் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

எனவே, டைமண்ட் ஹார்பர் தொகுதியில் 4 வாக்குச்சாவடிகளிலும், மெக்ராஹட் பட்சிம் தொகுதியில் 11 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 15 வாக்குச்சாவடிகளிலும் மறுதேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இன்று மறுவாக்குப்பதிவு

வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்ட 15 வாக்குச்சாவடிகளுக்கு இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே முறைகேடு நடைபெற்ற நிலையில் 15 வாக்குச்சாவடிகளுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

====