"Ready to release education loan documents; will BJP leaders show their degree certificates?" asks Abhijit Deepke. source:google
இந்தியா

"கல்விக் கடன் ஆவணங்களை வெளியிட தயார் : பாஜக தலைவர்கள் டிகிரி சான்றிதழை காட்டுவார்களா?": அபிஜீத் தீப்கே சவால்!

அபிஜீத் தீப்கே அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பியலில் முதுகலை அறிவியல் பட்டமும் பெற்றவர் ஆவார்.

Kavitha prasanna

"Ready to release education loan documents; will BJP leaders show their degree certificates?" asks Abhijit Deepke.

கல்விக் கடன் விவரங்களை வெளியிடத் தயார் எனக் கூறியுள்ள அபிஜீத் தீப்கே, பாஜக தலைவர்கள் தங்கள் பட்டப்படிப்புச் சான்றிதழ்களைக் காட்டத் தயாரா எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

அமெரிக்காவில் தான் பயின்றதற்கான கல்விக் கடன் விவரங்களை வெளியிடத் தயார் என்று தெரிவித்துள்ள 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' நிறுவனர் அபிஜீத் தீப்கே, பாஜக தலைவர்கள் தங்கள் பட்டப்படிப்பு சான்றிதழ்களைக் காண்பிக்கத் தயாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பின்னணி மற்றும் சர்ச்சை

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பதவி விலக வலியுறுத்தி, ஜந்தர் மந்தர் பகுதியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, இவர்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் தர்மேந்திர பிரதானும் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி

அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து போராட்டங்களில் பங்கேற்ற அபிஜீத் தீப்கே, புனேவில் இதழியல் இளங்கலைப் பட்டமும், அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பியலில் முதுகலை அறிவியல் பட்டமும் பெற்றவர் ஆவார்.

இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த பாஜக சமூக ஆர்வலர் அமித் திவாரி என்பவர், மகாராஷ்டிராவை சேர்ந்த அபிஜீத் தீப்கேவின் நிதிப் பின்னணி குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியுள்ளார்.

வெளிநாட்டுப் படிப்பிற்கான பண ஆதாரம் என்ன

அதில், அரசு ஊழியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அவரது தந்தை பகவான்ராவ் தீப்கேவுக்கு, மகனை வெளிநாட்டில் படிக்க வைக்கும் அளவுக்கு நிதி எவ்வாறு கிடைத்தது என்றும், வெளிநாட்டுப் படிப்பிற்கான பண ஆதாரம் என்ன என்றும் கேள்வி விடுக்கப்பட்டது.

அபிஜீத் தீப்கே விளக்கம் மற்றும் பதில் கேள்வி

இக்கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக அபிஜீத் தீப்கே தனது 'எக்ஸ்' பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.

"எனது உயர்கல்விக்காக பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் இருந்து கல்வி உதவித்தொகை பெற்றிருக்கிறேன். அத்துடன் கல்விக் கடனும் வாங்கியுள்ளேன். அது இன்னும் நிலுவையில் தான் உள்ளது, அதைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.

சான்றிதழ்களை பொதுவெளியில் தயாரா?

இதுகுறித்து யார் வேண்டுமானாலும் விசாரித்துக் கொள்ள முழு சுதந்திரம் உள்ளது. அதேபோல, பாஜக தலைவர்களும் தங்களது கல்வி சான்றிதழ்களைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும்."

மேலும், அமெரிக்காவில் தான் பயின்றதற்கான கல்விக் கடன் தொடர்பான கடிதங்களை வெளியிடத் தான் தயாராக இருப்பதாகக் கூறியுள்ள அவர், பாஜக தலைவர்கள் தங்களின் பட்டப்படிப்பு சான்றிதழ்களைக் காண்பிக்க தயாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

=====