Renowned singer Mary Millben revealed donations being sent from United States to 'cockroach' party  source:thamizhalai,ai generated
இந்தியா

CJP ’கரப்பான்பூச்சி கட்சிக்கு அமெரிக்கா நன்கொடை’ : மோடி அரசுக்கு எதிராக சதி : அம்பலப்படுத்திய பாடகி மேரி மில்பென்...!

பிரதமர் மோடி அரசின் நிர்வாகத்தை சீர்குலைக்கவே கரப்பான் பூச்சி கட்சியினருக்கு, அமெரிக்காவில் இருந்து நன்கொடை கொடுக்கப்படுவதாக பிரபல பாடகி மேரி மில்பென் அம்பலப்படுத்தி உள்ளார்.

Kannan

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இளைஞர்கள் பற்றி தெரிவிச்ச கரப்பான்கள் என்ற வார்த்தையை நையாண்டி செய்யற விதமா உருவானது தான் சிஜேபி அப்படின்னு அழைக்கப்படுற கரப்பான் பூச்சி ஜனதா கட்சி. சமூக ஊடக அமைப்பா அரசியல் கட்சியா இல்லாம செயல்படும் இதன் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளரா அபிஜித் தீப்கே செயல்பட்டு கிட்டு வர்றாரு. முன்பு ஆம் ஆத்மி கட்சியில் இருந்தவரு தான் இவர்.

மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள்

நீட் வினாத்தாள் வெளியான விவகாரத்தில, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டெல்லியில் பெரிய போராட்டத்தை முன்னெடுத்தது கரப்பான் பூச்சி கட்சி. ஜந்தர் மந்தரில் திரண்ட இளைஞர்கள் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதோடு, மழைக்கால கூட்டத் தொடரின் போது, நாடாளுமன்றத்தை நோக்கியும் பேரணி நடத்தினாங்க.

மத்திய அரசுக்கு தலைவலி, பொதுமக்களுக்கு பாதிப்பு

கரப்பான்களின் தீவிர போராட்டங்கள், மத்திய அரசுக்கு தலைவலியா அமைஞ்சது மட்டுமல்லாம, பொதுமக்களையும் கடும் பாதிப்புக்கு ஆளாக்கியது. மெட்ரோ நிலையங்கள் மூடல், போக்குவரத்து தடை, கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டதால், டெல்லிவாசிகள் பல்வேறு சிரமங்களை அனுபவிச்சாங்க. அப்போதே, சிஜேபி போராட்டங்களில் வெளிநாட்டு சக்திகளின் கை இருக்கிறதாவும், மத்திய பாஜக அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதறாவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

ஞானேஷ்குமாருக்கு எதிராக போராட்டங்கள்

இந்தநிலையில எஸ்ஐஆர் விவகாரத்தை முன்வைத்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகணும் அப்படின்னு இண்டியா கூட்டணி டெல்லியில பேரணி, போராட்டங்களை நடத்தியது.

ஜந்தர் மந்தரில் போராட்டங்களுக்கு தடை

அவங்கள தொடர்ந்து கரப்பான் பூச்சி கட்சியும் போராட்டங்களை முன்னெடுத்தது. இதன் காரணமா ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படக் கூடாது என்பதற்காக, ஜந்தர் மந்தரில் போராட்டங்களை நடத்த தடை விதித்த டெல்லி காவல்துறை, வேறு மூன்று இடங்களில் போராட்டங்களை நடத்த பர்மிஷன் கொடுத்து இருக்கு.

சிஜேபி நிர்வாகிகள் கைது, நீதிமன்ற காவல்

ஆனால் அதை ஏற்க மறுத்த சிஜேபி முன்​னணி நிர்​வாகி​களான சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா, அஜிங்​கியா ஷிண்டே ஆகியோர் ஜந்​தர் மந்​தர் பகுதி​யைச் சுற்றி அமைக்​கப்​பட்​டிருந்த பாது​காப்பு அரண்​களைத் தாண்டி உள்ளே நுழைய முயற்சி செஞ்சாங்க. அவங்களை போலீசார் கைது செய்த நிலையில, 5 பேரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருக்காங்க.

போராட்டங்களில் வெளிநாட்டு சக்திகள்

சிஜேபியினர் நடத்தும் போராட்டங்களின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள், மோடி அரசுக்கு எதிரான சதி இருக்கிறதா ஏற்கனவே பேச்சு அடிபடுது. பாஜக தலைவர்களும் இது தொடர்பா, தங்களோட சந்தேகங்களை முன்வச்சு பேசி வர்றாங்க.

அம்பலப்படுத்திய அமெரிக்க பாடகி மேரி மில்பென்

இந்த சூழல்ல அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகியான மேரி மில்பென் பின்னணி சதியை உறுதிப்படுத்தி இருக்காரு.

ஊடக ஆளுமை மேரி மில்பென்

இவர் வெறும் மேடை பாடகி மட்டும் கிடையாது. நடிகை, ஊடக ஆளுமை அப்படின்னு பன்முகத்தன்மை கொண்டவர். அமெரிக்காவின் தேசிய கீதம் மற்றும் தேசபக்தி பாடல்களை சர்வதேச மேடைகளில் பாடியதால உலக அளவில இவருக்கு ரசிகர்கள் இருக்காங்க.

சிஜேபிக்கு அமெரிக்காவில் இருந்து நிதி

பிரதமர் மோடி தலை​மையி​லான அரசுக்கு எதி​ராக போராட்​டம் நடத்​து​வதற்கு கரப்​பான் பூச்சி ஜனதா கட்​சிக்கு அமெரிக்​கா​வில் இருந்து நன்​கொடை வழங்​கப்​படு​வ​தாக அவர் தெரிவிச்சு இருக்காரு.

குறிவைக்கப்படும் உலக நாடுகள்

சமூக வலைத்​தளத்​தில் அவர் வெளி​யிட்ட பதிவில், “ அமெரிக்​காவை தளமாகக் கொண்ட நன்​கொடை​யாளர்​கள், சில நாடுகள தங்களோட இலக்கா நிர்ணயிச்சு செயல்பட்டுக்கிட்டு வர்றாங்க.

குழப்பத்தை ஏற்படுத்த நிதியுதவி

அந்த நாடுகளில் குழப்​பத்​தை​யும் அமை​தி​யின்​மை​யை​யும் ஏற்​படுத்​த, சில நடை​முறைகளை அவர் பின்பற்றி வர்றாங்க. முதலில் பழமை​வாத உலகத் தலை​வர்​களை குறிவைப்பாங்க.

இதற்காக அந்த நாட்டில இருந்து, அமெரிக்காவிற்கு வந்து படிச்ச ஒருவரை தேர்வு செய்து அவரை முன்னிறுத்து தங்களோட இலக்கை தீவிரப்படுத்துவாங்க.

அந்தநபரை அவரோட சொந்த நாட்டிற்கு அனுப்பி குழப்​பத்தையும், குளறுபடிகளையும் ஏற்படுத்த நன்கொடை என்கிற பெயரில நிதி கொடுப்பாங்க.

நிர்வாகம் பாதிப்பு, மக்கள் அவதி

இதுபோன்ற சதித் திட்டங்கள் பெரும்​பாலும் தோல்​வி அடைஞ்சு தான் இருக்கு. இருந்தாலும், சம்பந்தப்​பட்ட நாடு​களின் வளர்ச்சி மற்​றும் நிர்​வாகம், மக்களோட அன்றாட வாழ்க்கையில் பெரிய பாதிப்புகளை ஏற்​படுத்​துகின்​றன.

இந்திய இளைஞர்கள் குரல் கொடுக்கணும்

இந்​தி​யா​வில் ஆட்​சியை சீர்​குலைக்க வெளி​நாட்டு சக்​தி​கள் மேற்​கொள்​ளும் முயற்​சிகளை முறியடிக்க இந்​தி​யர்​கள் குரல் கொடுக்கணும். இளம் தேசபக்​தர்​கள் இதை எழுச்சியோடு முன்னெடுக்கணும்.

தேசபக்தியை வெளிப்படுத்த வேண்டும்

இந்​திய மண்​ணில் பிறந்​து, வளர்ந்​து, கல்வி கற்றவங்க நாட்டுக்காக குரலை உயர்த்த வேண்டும். அவர்​கள் ஒன்​றிணைந்​து, சிஜேபி​யின் சீர்​குலைப்பு முயற்சிகளை முறியடிக்க அமை​தி​யான முறை​யில் போராட வேண்​டும்.

இளைஞர்களுக்கு மேரி மில்பென் அறிவுரை

ஜனநாயகத்​தை​யும் சுதந்திரத்தையும் பாது​காக்க எப்​போதும் ஒரு எதிர் இயக்​கம் விழிப்பா இருக்க வேண்​டும், அப்படின்னும் பாடகி மேரி மில்​பென் அறிவுறுத்தி இருக்காங்க.

இந்த குற்றச்சாட்டை மத்திய பாஜக அரசு மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்டு, கரப்பான்களுக்கு எங்கிருந்து நன்கொடை என்ற பெயரில் நிதி வருது, கொடுக்கிறவங்களோட உள்நோக்கம் என்ன? இது இந்தியாவில எப்படிப்பட்ட நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்தி, மக்களை குழப்புது அப்படிங்கறத விசாரிக்க கடும் நடவடிக்கை எடுக்கணும் அப்படிங்கறது தான் 140 கோடி மக்களின் எதிர்பார்ப்பா இருக்குது.

========================