Restoration of Peace in Chhattisgarh: The End of Naxal Dominance and a Rebirth!
வன்முறையிலிருந்து விடியல் நோக்கி
ஒரு காலத்தில் துப்பாக்கிச் சத்தமும் கண்ணிவெடித் தாக்குதல்களும் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தில், தற்போது அமைதியும் முன்னேற்றமும் நிலவி வருகின்றன.
1980-களில் வேரூன்றி, அடர்ந்த காடுகள் நிறைந்த பஸ்தார் மண்டலம் வழியாக ஊடுருவிய நக்சல் இயக்கம், 2004 முதல் 2014 வரை அப்பகுதியைத் தனது முக்கிய வியூக மையமாகப் பயன்படுத்தியது.
2014-க்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட உறுதியான நடவடிக்கைகளால் அம்மாநிலம் தற்போது வேகமான வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது.
நக்சல் ஒழிப்பும் பாதுகாப்பு வியூகமும்
கடந்த கால் நூற்றாண்டில் நக்சல் வன்முறைகளால் 1,455 பாதுகாப்புப் படையினரும், 1,922 பொதுமக்களும் உயிரிழந்தனர். இதனால் பஸ்தார், பீஜாப்பூர், தந்தேவாடா, சுக்மா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அரசுத் திட்டங்கள் முடங்கின. இந்நிலையை மாற்ற, பஸ்தாரில் 5 முதல் 10 கி.மீ. இடைவெளியில் மத்திய பாதுகாப்புப் படை (CRPF) முகாம்கள் அமைக்கப்பட்டன.
2024 முதல் தீவிரப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளால் நக்சல்களின் உணவு மற்றும் ஆயுத விநியோகம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
மறுவாழ்வுத் திட்டங்களும் இயல்பு வாழ்க்கையும்
அரசின் தீவிர வியூகத்தால் 2024-25 காலக்கட்டத்தில் மட்டும் 454 நக்சல்கள் சரணடைந்தனர். சரணடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரை நிதியுதவியும், தொழிற்பயிற்சிகளும் வழங்கி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சரணடைந்த பெண் நக்சல்களுக்கு திருப்பூர் நிறுவனங்கள் மூலம் ஆடை உற்பத்திப் பயிற்சிகளும் வேலைவாய்ப்பும் வழங்கப்படுகின்றன.
இத்தகைய முயற்சிகளின் பலனாக, 2026-ல் சத்தீஸ்கர் நக்சல்கள் அற்ற மாநிலமாக உருவெடுத்துள்ளது. தற்போது அப்பகுதிகளில் சாலை, மின்சாரம், குடிநீர், கல்வி மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் சீரடைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளனர்.
இதையும் படிங்க: CM Big Update : ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் : இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி : பொங்கலுக்கு அமல்!
======