Rise in Aviation Fuel Prices; Domestic and International Airfares Increase  google
இந்தியா

உள்​நாட்​டு, சர்​வ​தேச விமான கட்டணங்கள் உயர்வு : இன்று முதல் அமல் : 2வது முறை​யாக அதிகரிப்பு!

விமானங்களுக்கான எரிபொருள் விலை கடுமை​யாக உயர்ந்​துள்​ள​தால், ஏர் இந்​தியா மற்​றும் ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ் விமான நிறு​வனங்​கள், பயணி​களுக்​கான விமான டிக்​கெட் கட்டணங்​களை உயர்த்​தி​யுள்​ளன.

Rohini

போர் எதிரொலி : விமான கட்டணங்கள் உயர்வு

அமெரிக்​கா, இஸ்​ரேல் - ஈரான் போர் காரண​மாக, விமான எரி பொருட்களின் விலை, பல மடங்கு அதி​கரித்​துள்​ளது. குறிப்​பாக, விமானங்​களுக்கு பயன்​படுத்​தும் எரிபொருள் விலை கடுமை​யாக உயர்ந்​துள்​ள​தால்,உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவைகளுக்கான விமான கட்டணமானது உயர்ந்துள்ளது .

விலையை உயர்த்திய விமானங்கள்

போர் எதிரொலியால் விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்த்துள்ளதன் விளைவாக , ஏர் இந்​தியா மற்​றும் ஏர் இந்​தியா எக்​ஸ்​பிரஸ் விமான நிறு​வனங்​கள், பயணி​களுக்​கான விமான டிக்​கெட் கட்டணங்​களை உயர்த்​தி​யுள்​ளன. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வரு​கிறது.

2 வது முறையாக கட்டண உயர்வு

கடந்த மார்ச் 12-ம் தேதி விமான டிக்​கெட் கட்டணங்கள் உயர்த்​தப்​பட்ட நிலை​யில், 2-வது முறை​யாக கட்டண உயர்த்தப்பட்டுள்ளதால் பயணி​கள் பெரிதளவில் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர்.

கட்டுப்பாடுகள் - அமைச்சகம் உத்தரவு

சிவில் விமான போக்​கு​வரத்து துறை அமைச்​சகம், உள்​நாட்டு விமான கட்​ட​ணங்​களை 25 சதவீதத்​துக்கு மேல் உயர்த்த கூடாது என்று கட்டுப்​பாடு​களை விதித்​துள்​ளது. எனவே, தற்போது உள்​நாட்டு விமான பயணங்​களுக்கு கட்டண உயர்வு ரூ.299 முதல்​, ரூ.899 வரை அதிகரித்​துள்​ளது.

விமான கட்டண விலை நிர்ணயம்

அதன்​படி, முதல் 500 கிலோ மீட்​டர் வரை ரூ.299, 501-ல் இருந்து 1,000 கிலோ மீட்​டர் வரை ரூ.399, 1,001 முதல் 1,500 கிலோ மீட்​டர் வரை ரூ.549, 1,501 முதல் 2,000 கிலோ மீட்​டர் வரை ரூ.749, 2,000 கிலோ மீட்​டருக்கு மேல் ரூ.899 என கட்​ட​ணம் நிர்ணயம் செய்து விலையை உயர்ந்​துள்​ளது.

முன்பதிவு செய்திருந்தாலும் இது பொருந்தாது

ஏர் இந்​தி​யா, ஏர் இந்​தியா எக்ஸ்பிரஸ் விமானங்​களில் பயணிக்க, முன்​ன​தாகவே டிக்கெட்டுகள் முன்​ப​திவு செய்து இருந்த பயணி​களுக்​கு, இந்த கட்டண உயர்வு பொருந்​தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

அவர்​கள் பழைய கட்டண டிக்கெட்களில் பயணிக்​கலாம். ஆனால் பயண தேதி, அல்​லது பயணம் செய்​யும் முறைகளில் மாற்றங்களை மேற்கொண்டால் ​, புதி​ய கட்​ட​ணம்​ வசூலிக்​கப்​படும்​ என்​று அறிவிக்கப்பட்டுள்ளது.