Ritabrata Banerjee become Leader of the Opposition with the support of 58 MLAs, setback to Mamata  google
இந்தியா

West Bengal : ”எதிர்க்கட்சித் தலைவர் Ritabrata Banerjee” : TMC எம்எல்ஏக்கள் 58 பேர் ஆதரவு : மம்தாவுக்கு பின்னடைவு...

மம்தாவுக்கே தண்ணி காட்டும் வகையில் 58 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் எதிர்க்கட்சி தலைவராகி இருக்கிறார். ரிதபிரதா பானர்ஜி.

Kannan

முடிவுக்கு வந்த மம்தா ஆட்சி

மேற்கு வங்க சட்டமன்றத ஏர்தலில் மூன்று முறை ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கோட்டை தகர்க்கப்பட்டு, பாஜக முதல்முறையாக ஆட்சியை பிடித்தது.

திரிணாமூல் காங்கிரசார் விரக்தி

தேர்தல் தோல்வி திரிணாமூல் காங்கிரசாரை விரக்தியில் ஆழ்த்தி இருக்கிறது. கட்சி தலைமை மீது மூத்த தலைவர்களே பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.

கட்சிப் பதவிகளில் இருந்து விலகி வருகின்றனர். இதனால், திரிணாமுல் காங்கிரசுகுள் உட்கட்சிப் பூசல் நிலவுகிறது.

ரித பிரதா பானர்ஜி - எதிர்க்கட்சி தலைவர்

இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ரிதபிரதா பானர்ஜி, எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

58 எம்எல்ஏக்கள் ஆதரவு

58 எம்எல்ஏக்கள் ஆதரவுக் கையெழுத்துடன் எதிர்க்கட்சித் தலைவராக உரிமை கோரிய ரிதபிரதா பானர்ஜியின் மனுவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவராக சோபன் தேவ் என்பவரை நியமிக்க வேண்டும் என்ற மம்தா தரப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இது மம்தா தரப்புக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

மம்தாவுக்கு பெரும் பின்னடைவு

மம்தா பானர்ஜியை தங்கள் தலைவராக பார்ப்பதாகவும் கட்சியை பிளக்கும் நோக்கம் இல்லை என்றும் ரிதபிரதா பானர்ஜி கூறினாலும், 58 எம்எல்ஏக்கள் அவர் பக்கம் சாய்ந்ததால், மம்தா பானர்ஜி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனாவில் ஏற்பட்ட பிளவு போல திரிணாமுல் காங்கிரசும் பிரச்னையை நோக்கி செல்வதாக தெரிகிறது.

யார் இந்த ரிதபிரதா பானர்ஜி?

மேற்கு வங்க அரசியலில் இடதுசாரி மாணவர் தலைவராக அறியப்பட்ட ரிதபிரதா பானர்ஜி, எஸ்எஃப்ஐயின் பொதுச்செயலராக அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

சிபிஎம் முன்னாள் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரிக்கு நெருக்கமானவராக கருதப்பட்டார். 2014ம் ஆண்டு 34 வயதில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார்.

2017ஆம் ஆண்டு கட்சித் தலைமையுடனான மோதல் மற்றும் சர்ச்சைகளுக்குப் பிறகு சிபிஎம்மில் இருந்து ரித ப்ரதா பானர்ஜி நீக்கப்பட்டார்.

திரிணாமூல் காங்கிரஸ்

2018ம் ஆண்டு திரிணமூல் காங்கிரஸில் இணைந்த அவர், கட்சியின் தொழிற்சங்கப் பிரிவு தலைவராகவும், 2024ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வானார்.

மம்தா பானர்ஜியின் நம்பிக்கையைப் பெற்ற தலைவர்களில் ஒருவராக உருவெடுத்த ரிதபிரதா பானர்ஜி, 2026 சட்டமன்றத் தேர்தலில் உலுபேரியா பூர்பா தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வானார்.

மம்தாவுக்கு எதிராக...

தற்போது திரிணாமுல் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், மம்தா பானர்ஜிக்கு எதிராக அணி திரண்டுள்ள எம்எல்ஏக்களின் ஆதரவுடன் மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்று இருக்கிறார்.

====================================