RRB Recruitment 2025 Job Vacancy Notification in Tamil 
இந்தியா

RRB Job: இளைஞர்களுக்கு வாய்ப்பு : காத்திருக்கும் 8,875 பணியிடங்கள்

RRB Recruitment 2025 Job Vacancy Notification : இந்திய ரயில்வேயில் 8,875 காலி பணியிடங்களை இளைஞர்களை தேர்வு செய்ய ஆர்ஆர்பி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

Kannan

இந்திய ரயில்வே :

RRB Recruitment 2025 Job Vacancy Notification : உலகில் அதிக அளவில் அதாவது 11 லட்சம் தொழிலாளர்களுடன் செயல்பட்டு வருவது இந்திய ரயில்வே. இதற்கு ஆண்டு தோறும் தேவைப்படும் ஊழியர்களை, இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) தேர்வு செய்து பணியமர்த்துகிறது.

இளைஞர்களின் கனவு ரயில்வே :

இந்திய ரயில்வேயில் வேலை(Railway Job) செய்வது இளைஞர்களின் கனவாக இருந்து வருகிறது. அதிக சம்பளம், குறைந்த பணிச்சுமை மற்றும் நிரந்தர வேலை வாய்ப்பு என்பதால் ரயில்வே வேலைகளுக்கு மிகுந்த மதிப்பு உள்ளது. கூடுதலாக, ஊழியர்களுக்கு இலவசப் பயணம், சலுகைகள், ஓய்வூதியம் போன்ற உள்பட ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

ரயில்வேயில் 8,875 பணியிடங்கள் :

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) 2025–26ம் ஆண்டிற்கான NTPC (Non-Technical Popular Category) வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. மொத்தம் 8,875 காலிப்பணியிடங்கள்(RRB Job Vacancy) நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பட்டப்படிப்பு மற்றும் இடைநிலை கல்வி முடித்தவர்களுக்கு பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

தேவையான கல்வித்தகுதி அவசியம் :

ரயில்வே பணியிடத்தில் சேர விண்ணப்பிக்க விரும்புவோர் தகுந்த கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஸ்டேஷன் மாஸ்டர், கூட்ஸ் ரயில் மேலாளர் போன்ற உயர்ந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்(RRB Qualification). அதேபோல், இடைநிலைக் கல்வி முடித்தவர்கள் ஜூனியர் கிளார்க், அக்கவுண்ட்ஸ் கிளார்க் போன்ற பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு பணிகளுக்கு 18 முதல் 36 வரை வயது வரம்பு, மற்ற பணிகளுக்கு 18 முதல் 33 வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்டங்களாக தேர்வு முறை :

இந்த NTPC ஆட்சேர்ப்பு இரண்டு கட்டங்களில் நடைபெறும். முதலாவது, கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) நடத்தப்படும். இதில் தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைக்குச் செல்ல வேண்டும். முழுமையான அறிவிப்பு வெளியாகும் போது தேர்வு தேதிகள் மற்றும் விண்ணப்ப நடைமுறைகள் தெளிவாக அறிவிக்கப்படும்.

வேலைக்கு தகுந்த ஊதியம் :

NTPC வேலைகளுக்கான சம்பளம் 7வது மத்திய ஊதியக் குழு(7th Pay Commission) விதிமுறைகளின்படி வழங்கப்படும். பட்டப்படிப்பு தகுதியுள்ள சில வேலைகளுக்கு மாதம் லட்சங்களில் சம்பளம் கிடைக்கும். மேலும், ஊழியர்களுக்கான மருத்துவம், பயணம், ஓய்வூதியம் போன்ற கூடுதல் பலன்களும் கிடைக்கும்.

மேலும் படிக்க : Southern Railway 3518 Apprentice வேலைகள் : 10ம் வகுப்பு போதும்

தேர்வுக்கு தயாராக அறிவுரை :

விண்ணப்பிக்க விரும்பும் இளைஞர்கள் முன்கூட்டியே பாடத்திட்டம், தேர்வு முறைகளை அறிந்து கொண்டு தயாராக வேண்டும். ஏனெனில் விண்ணப்பம் மற்றும் தேர்வு தேதிகள் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

===============