https://www.rss.org
இந்தியா

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா : நாடு முழுவதும் மாநாடுகள் நடத்த திட்டம்

ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் (RSS) தனது நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் இந்து மாநாடுகள் மற்றும் பொது விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

MTM

இந்த ஆண்டின் விஜயதசமி நாள், ஆர்எஸ்எஸ் தனது நிறுவப்பட்ட 100வது ஆண்டைக் குறிக்கிறது. இந்த சிறப்புநாளை முன்னிட்டு, ஆகஸ்ட் 26 முதல் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் சங்கத் தலைவர் மோகன் பகவத் தலைமையில் மூன்று நாள் தொடர் சொற்பொழிவு நடைபெற உள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பில் “ஸாகா” எனப்படும் அதன் உள்ளூர் கிளைகள் தான் அதன் மிகப்பெரிய பலம் என கருதப்படுகிறது. இந்த ஆண்டு, 1 லட்சத்திற்கு மேற்பட்ட ஸாகாக்களை நிறுவும் இலக்கை வைத்துள்ளது.

இந்த தகவலை தெரிவித்த டெல்லி பிராந்தியஆர்எஸ்எஸ் செயலாளர் அனில் குப்தா, இந்த ஆண்டின் இறுதிக்குள், இந்தியா முழுவதும் சுமார் 1,500 முதல் 1,600 இந்து மாநாடுகளை நடத்த ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளது என்றார்.