Ruling Left Alliance suffered a crushing defeat in the Kerala local body elections 2025, BJP captured Thiruvananthapuram Corporation Google
இந்தியா

கேரள உள்ளாட்சி தேர்தல்: ஆளுங்கட்சி தோல்வி, திருவனந்தபுரம் BJP வசம்

Kerala Local Body Election 2025 Results Tamil : கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சியான இடதுசாரி கூட்டணி படுதோல்வியை சந்தித்து இருக்கும் நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றி இருக்கிறது.

Kannan

கேரள உள்ளாட்சி தேர்தல்

Kerala Local Body Election 2025 Results Tamil : 2026ம் ஆண்டு கேரள சட்டசபைக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னோட்டமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம், 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள், இன்று எண்ணப்பட்டன.

முன்னிலையில் காங்கிரஸ் கூட்டணி

இந்தத் தேர்தலில் ஆளும் இடதுசாரி ஜனநாயக கூட்டணியைக் காட்டிலும், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியே பெரும்பான்மையை இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 4ல் முன்னிலை வகிக்கிறது. கண்ணூர், எர்ணாகுளம், கொல்லம், திருச்சூர் ஆகிய 4 மாநகராட்சியை காங்கிரஸ் கைப்பற்றுகிறது. ஆளும் இடதுசாரி கூட்டணி கோழிக்கோடு மாநகராட்சியில் முன்னிலை பெற்றுள்ளது.

திருவனந்தபுரம் மாநகராட்சி - பாஜக வெற்றி

அதேபோல, திருவனந்தபுரம் மேயர் பதவியை பாஜ தன்வசப்படுத்துகிறது. மொத்தம் உள்ள 101 வார்டுகளில் பாஜ கூட்டணி 55 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

941 கிராம பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் கூட்டணி 439 இடங்களிலும், இடதுசாரி கூட்டணி 373 இடங்களிலும், என்டிஏ கூட்டணி 23 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

மொத்தம் உள்ள 152 வட்டார ஊராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 81 இடங்களிலும், இடதுசாரி கூட்டணி 63 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

14 மாவட்ட பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் கூட்டணி 8 இடங்களிலும், இடதுசாரி கூட்டணி 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

87 நகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 55 இடங்களிலும், இடதுசாரி கூட்டணி 28 இடங்களிலும், என்டிஏ கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

ஆளுங்கட்சிக்கு பின்னடைவு

அடுத்தாண்டு நடக்கும் சட்டசபை தேர்தலுக்கு, இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

பாஜக ஹாட்ரிக் வெற்றி

பாலக்காடு நகராட்சியை பாஜக கூட்டணி தொடர்ந்து 3வது முறையாக கைப்பற்றியுள்ளது. பாஜ 25 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கூட்டணி 17 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தேர்தல் வெற்றிகள் பாஜக, காங்கிரஸ் கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளன.

=====