Russia Oil Trade 5% Discount To India 
இந்தியா

Russia: குறைந்த விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்: ரஷ்யா அதிரடி

Russia Crude Oil Discount To India : இந்தியாவுக்கு 5 சதவீத தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்யப்படும் என்று, ரஷ்யா அறிவித்து இருக்கிறது.

Kannan

வரி விதிப்பால் தோற்கும் அமெரிக்கா :

Russia Crude Oil Discount To India : ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருவதை விரும்பாத, அமெரிக்கா தனது பாணியில் வரி போர் நடத்தி வருகிறது. ஆத்திரத்தில் கொப்பளிக்கும் அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்தார், பின்னர் அதை 50 சதவீதமாக உயர்த்தி இருக்கிறார். இதன் காரணமாக இன்னும் சில வாரங்களில் இந்திய பொருட்கள் எதுவும் அமெரிக்க கடைகளில் விற்பனைக்கே வராது. இதன் காரணமாக அந்நாட்டு மக்களின் கோபம் அதிபர் டிரம்பிற்கு எதிராக திரும்பவே செய்யும்.

தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் :

இந்தியாவுக்கு தொடர்ந்து கச்சா எண்ணெய் சப்ளை செய்து வரும் ரஷ்யா, தற்போது 5 சதவீத தள்ளுபடி விலைக்கு(Russia Exports To India on 5% Discount) விற்க முன்வந்து இருக்கிறது. அமெரிக்கா வரியை உயர்த்தி, இந்தியாவை மிரட்டி வரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவின் செயல் அமைந்துள்ளது. 50 சதவீத அமெரிக்க வரிவிதிப்பு சவால் விடும்(US Tariffs on India) வகையில் விலையை குறைத்து இருக்கிறது ரஷ்யா.

மேலும் படிக்க : "Backfire" ஆகும் 25% வரி : ட்ரம்ப் மீது அமெரிக்கர்கள் காட்டம்

இந்தியாவின் இறக்குமதி செலவு குறையும் :

இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 2024-25 நிதியாண்டில் 35% ஆக(Russia Oil Share in India) உயர்ந்துள்ளது, மேலும் இந்த தள்ளுபடி மூலம் இந்தியாவின் இறக்குமதி செலவில் கணிசமான சேமிப்பு ஏற்படும். இந்த சலுகை வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும் என்று ரஷ்ய துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா தெரிவித்துள்ளார். உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய்(Crude Oil) இறக்குமதியாளராக இந்தியா இருப்பது குறிப்பிடத்தக்கது

========