Vladimir Putin To America About India : ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்து இருக்கிறது. இதனால், இந்திய பொருட்களை அமெரிக்காவில் விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிபர் டிரம்பின் பிடிவாத போக்கு, இருநாட்டு நல்லுறவை பாதித்து இருக்கிறது.
வரிகளை உயர்த்தினால் அமெரிக்காவுக்கு பாதிப்பு
இந்தநிலையில், ரஷ்யாவின் சோச்சி நகரில் சர்வதேச அளவிலான பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சி நடந்தது. இந்தியா உள்ளிட்ட 140 நாடுகள் பங்கேற்ற இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய அதிபர் விளாதிமிர் புதின், “ரஷ்யாவின் வர்த்தக ரீதியான கூட்டாளிகள் மீது அதிக வரிகள் விதிக்கப்பட்டால், அது உலக அளவில் எரிசக்தி பொருட்கள் மீதான விலையை உயர்த்தும். இதன் காரணமாக அமெரிக்க ஃபெடரல் மத்திய ரிசர்வ் வங்கி வட்டி(Federal Bank) விகிதத்தை அதிகரிக்க வேண்டி இருக்கும். இதனால் அமெரிக்க பொருளாதாரம் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
இந்தியா செல்ல ஆர்வமாக இருக்கிறேன்
இந்திய பயணத் திட்டத்தை(Vladimir Putin India Visit Plans) எதிர்நோக்கி உள்ளேன். இந்தியாவுடன் எங்களுக்கு எப்போதும் சிக்கல் இருந்ததில்லை. நிச்சயம் அயலக அழுத்தங்களுக்கு இந்திய தேசம் அடிபணியாது. அது மாதிரியான நகர்வை பிரதமர் மோடி(Vladimir Putin About PM Modi) அனுமதிக்க மாட்டார். இந்தியா எங்களிடம் இருந்து எரிசக்தி பொருட்களை வாங்குவதை நிறுத்தினால் சுமார் 9 பில்லியன் முதல் 10 பில்லியன் டாலர்கள் வரை ரஷ்யாவுக்கு இழப்பு ஏற்படும்.
அமெரிக்கா வரி விதிப்பு ரஷ்யா ஈடு செய்யும் :
அமெரிக்க வரிவிதிப்பால் இந்தியாவுக்கு(US Tariffs on India) ஏற்பட்டுள்ள இழப்பை ரஷ்யா ஈடு செய்யும். அந்த வகையில் இந்தியாவில் இருந்து விவசாய பொருட்கள் மற்றும் மருந்துகளை ரஷ்யா வாங்கும். இதோடு நட்பு நாடு என்ற அந்தஸ்தும் இருக்கும். ஒருபக்கம் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறது.
எங்கள் தேவை உங்களுக்கு இருக்கு :
அதே நேரத்தில் வேறு சிலவற்றில் ரஷ்யாவை சார்ந்தே அமெரிக்கா(Russia vs America) உள்ளது. அமெரிக்க சந்தைக்கு தேவைப்படும் யுரேனியத்தை விநியோகிக்கும் நாடுகளில் ரஷ்யா இரண்டாம் இடத்தில் உள்ளது. இதேபோன்று, சிலவற்றில் இந்தியாவை அமெரிக்கா சார்ந்து இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்” இவ்வாறு புதின் பேசினார்.
====================