Sabarimala Temple Gold Crown Stolen: High Court Supervision Team Probes Incident
பாதுகாப்பு அறையில் வைத்திருந்த தங்கக் கிரீடம் மாயம்?
கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 55.75 சவரன் மதிப்பிலான தங்க கிரீடம் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ. 70 லட்சம் வரை எனத் தெரிவிக்கப்படுகிறது.
போலி கிரீடம் வைக்கப்பட்டதாகத் தகவல்
2012-ஆம் ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கிய இந்தத் தங்க கிரீடத்திற்குப் பதிலாகப் போலி கிரீடம் ஒன்று வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவாபரணம் ஆணையர் மறுப்பு
அதேநேரத்தில், தங்கக் கிரீடம் தொலைந்து போகவில்லை எனத் திருவாபரணம் ஆணையர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலின் தங்க கிரீடம் மாயமானதாக சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் பரவிய தகவல்களுக்கு திருவாபரண ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
தங்க கிரீடம் காணாமல் போகவில்லை என்றும், அது தொடர்பாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தேவசம் ஆணையருக்கு அளித்த விளக்க அறிக்கையில், சபரிமலையில் பயன்படுத்தப்படும் அசல் தங்க கிரீடமும் அதே வடிவமைப்பில் தயாரிக்கப்பட்ட மற்றொரு கிரீடமும் பாதுகாப்பு அறையில் (Strong Room) பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
கோயில்களில் உள்ள மதிப்புமிக்க பொருட்களுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு காரணங்களுக்காக ஒரே மாதிரியான மாற்று பொருட்கள் வைத்திருப்பது வழக்கமான நடைமுறையாகும் என்றும் விளக்கப்பட்டுள்ளது.
ஆவனங்கள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளதா?
மேலும், சர்ச்சைக்குரியதாக கூறப்பட்ட அந்த கிரீடம் 2012-ஆம் ஆண்டிலேயே காப்பீட்டு பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தங்க கிரீடம் காணாமல் போனதாக வெளியான தகவல்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று திருவாபரண ஆணையர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆய்வுகளை மேற்கொண்டுவரும் தேவசம்போர்டு
இந்த விவகாரம் தொடர்பாக தேவசம் நிர்வாகம் தேவையான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், பக்தர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உயர் நீதிமன்றத்தின் சரிபார்ப்பு நடவடிக்கை
உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, நீதிபதி கே.டி. சங்கரன் தலைமையில் சபரிமலையில் உள்ள ஐயப்பனின் ஆபரணப் பொருட்கள் சரிபார்க்கப்பட்ட போது, இந்தத் தங்க கிரீடம் காணாமல் போனது தெரியவந்துள்ளது.
இந்தக் கிரீடம் கண்காணிப்பு கேமரா இல்லாத இடத்தில் வைக்கப்பட்டிருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
முந்தைய தங்கக் கவச விவகாரப் பின்னணி
ஏற்கனவே சபரிமலை கோயிலில் துவார பாலகர் சிலைகள் மற்றும் கருவறைக் கதவுகளின் தங்க கவசங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு எடை குறைந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது தங்கக் கிரீடம் மாயமான செய்தி வெளியாகியுள்ளது.
நீதிமன்றத்தில் விரைவில் அறிக்கை தாக்கல்
உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள ஐயப்பனின் ஆபரணப் பொருட்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையில் இதுகுறித்த கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
=======