global democratic satisfaction : india first place 
இந்தியா

ஜனநாயகத்தில் திருப்தி : இந்தியாவுக்கு முதலிடம்

ஜனநாயக ஆட்சி குறித்து உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது.

MTM

Pew ஆய்வு மையம் ஜனநாயக நாடுகளில் அதன் பல்வேறு கூறுகளை அடிப்படையாக வைத்து ஆய்வு நடத்தியது. அதில் 74 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதுகுறித்து பெருமிதம் தெரிவித்து, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னேறிய பொருளாதாரத்தைக் கொண்ட பெரும்பாலான நாடுகளில் ஜனநாயக ஆட்சியின் மீது அதிகரித்து வரும் அதிருப்தியால் மக்கள் போராடி வருகின்றனர். இந்தநேரத்தில், இந்தியா நிலைத்தன்மை மற்றும் திருப்தியின் ஒரு கலங்கரை விளக்கமாக உயர்ந்து நிற்கிறது.

இது Pew ஆய்வு மையம் வெளியிட்டுள்ளபடி, நமது நாடு உலகளாவிய ஜனநாயக திருப்தியில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது.

நமது நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ஜனநாயகம் மற்றும் பொருளாதாரம் இரண்டிலும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் இவ்வாராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பெருமைக்கும் பாராட்டுகளுக்கும் தொலைநோக்குப்பார்வைகொண்ட பாரத பிரதமர் மோடியின் தலைமையே காரணம். அவருடைய தலைமையில் பாரதம் அதன் ஜனநாயக வேர்களை ஆழப்படுத்தியது மட்டுமல்லாமல், நாட்டின் எதிர்காலத்தில் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அந்தப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.