scheme to provide financial assistance of Rs 3,000 per month to women has been launched in West Bengal google
இந்தியா

Annapurna Yojana : ” மகளிருக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி” : மேற்கு வங்கத்தில் தொடக்கம், 28.25 லட்​சம் பெண்​கள் பயன்...

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Kannan

மேற்கு வங்கம் - பாஜக அரசு

மேற்கு வங்​கத்​தில் சுவேந்து அதி​காரி தலை​மையி​லான பாஜக அரசு முதன்​முறை​யாக பொறுப்​பேற்​றுள்​ளது. தேர்​தல் வாக்​குறு​திப்​படி ஏற்கனவே, மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டம் கடந்த 1ம் தேதி அமலுக்கு வந்தது.

மகளிர் நிதியுதவி திட்டம்

தேர்தலின் போது மகளிருக்கு மாதம் 3,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்து இருந்தது. ஏற்கனவே, மம்தா பானர்ஜி முதல்வராக இருந்த போது, மகளிருக்கு மாதம் ரூ.1,500 நிதியுதவியாக வழங்கப்பட்டு வந்தது.

‘அன்​னபூர்ணா யோஜ​னா'

இந்தநிலையில் மாதம் 3,000 வழங்கும் ‘அன்​னபூர்ணா யோஜ​னா' திட்​டத்தை, முதல்வர் சுவேந்து அதிகாரி தொடங்கி வைத்​தார்.

28.25 லட்சம் மகளிர் பயன்

அன்​னபூர்ணா திட்​டத்​துக்​காக உருவாக்​கப்​பட்ட பிரத்​யேக இணை​ய தளத்​தில், கடந்த மூன்று நாட்களில் 28,25,769 பயனாளி​கள் பதிவு செய்​துள்​ளனர்.

பிரதமர் நரேந்​திர மோடி​யின் உத்​தர​வாத​மும், இரட்டை இன்​ஜின் அரசின் அர்ப்​பணிப்​பும் ரூ.3,000 நிதி​யுதவி வழங்​கும் வாக்​குறுதி நிறைவேற்​றப்​படு​வதை உறுதி செய்​துள்​ளது என்று முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்தார்.

அனைத்து பெண்களுக்கு நிதியுதவி

புதிய விண்​ணப்​பங்​கள் ஏற்​றுக் கொள்​ளப்​படும். மூன்று மாதங்​களில் சரி​பார்ப்​புப் பணி​கள் முடிவடைந்த பின்​னர், தகு​தி​யுள்ள அனைத்து பயனாளி​களுக்​கும் மாதம் ரூ.3,000 நிதி​யுதவி வழங்​கப்​படும்.

வங்கிக் கணக்கில் நிதியதவி செலுத்தம்

விண்​ணப்​பப் படிவங்​கள் பெறப்​பட்டு சரி​பார்ப்பு முடிந்​ததும், பயனாளி​களின் வங்​கிக் கணக்​கு​களில் ரூ.3,000 நேரடி​யாகச் செலுத்​தப்​படும். தகுதி​யுள்ள ஒவ்​வொரு பெண்​ணும் இந்த பலனைப் பெறு​வதை உறுதி செய்​வதே எங்​களின் இலக்​கு, என்று முதல்வர் சுவேந்து அதிகாரி உறுதியளித்தார்.

========