புதுச்சேரி சட்டசபை தேர்தல்
seat sharing in the Puducherry NDA alliance has been finalized. NR Congress is contesting in 16 seats and BJP in 10 seats : புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. 23ம் தேதி திங்கட்கிழமையோடு மனுத்தாக்கல் நிறைவு பெறுகிறது.
ஏப்ரல் 9ல் வாக்குப்பதிவு
30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.. இந்தச்சூழலில் என்டிஏ கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்தது.
என்டிஏ கூட்டணியில் இழுபறி
19 தொகுதிகளை கேட்கும் முதல்வர் ரங்கசாமி, புதிதாக வந்துள்ள லட்சிய ஜனநாயக கட்சியை கூட்டணிக்குள் சேர்க்கவும் கடும் எதிர்ப்பு காட்டினார்.
மத்திய அமைச்சரும், பாஜக தேர்தல் பொறுப்பாளரான மான்சுக் மாண்டவியா புதுச்சேரிக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்த 2 நாட்களாக காத்திருந்தார். அவரை சந்திப்பதை தவிர்த்த முதல்வர் ரங்கசாமி, திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டார்.
இரண்டு தொகுதிகளில் மனுத்தாக்கல்
இன்று புதுச்சேரி வந்த அவர், கட்சியினருக்கு வேட்புமனு படிவங்களை வழங்கி விட்டு, மங்கலம், தட்டாஞ்சாவடி என இரண்டு தொகுதிகளில் மனுத்தாக்கல் செய்தார்.
பின்னர் மங்கலம் தொகுதிக்கு கோரிமேடு ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்திலும், தட்டாஞ்சாவடி தொகுதிக்கு சாரம் நில அளவை துறை அலுவலகத்திலும் ரங்சாமி தனது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்.
மன்சுக் மாண்டவியாவுடன் ரங்கசாமி பேச்சு
இந்தநிலையில், மான்சுக் மாண்டவியாவை அவர் தங்கி இருக்கும் ஓட்டலில் சென்று சந்தித்தார் ரங்கசாமி. இதன்மூலம் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கும் அவர், என்டிஏ கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் நீடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.
என்ஆர் காங்கிரஸ் 16 தொகுதிகள்
இன்றைய பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது. அந்தவகையில் என்ஆர் காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
10 தொகுதிகளில் பாஜக
கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் பாஜக 10 தொகுதிகளில் களம் காண்கிறது
அதிமுக, எல்ஜேக தலா 2 கட்சிகள்
அதிமுக 2 தொகுதிகளிலும், புதிதாக கூட்டணிக்கு வந்துள்ள லட்சிய ஜனநாயக கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
=====
==========