Secondary school teachers have resumed their strike after failing to reach an agreement with the Minister of Education regarding equal pay for equal work. 
இந்தியா

பேச்சுவார்த்தை தோல்வி : போராட்டத்தை தீவிரப்படுத்திய ஆசிரியர்கள்

சம வேலைக்கு சம ஊதி​யம் தொடர்​பாக பள்​ளிக்கல்​வித் துறை அமைச்​சருடன் நடை​பெற்ற பேச்சு​வார்த்​தை​யில் உடன்​பாடு ஏற்​ப​டாத​தால், இடைநிலை ஆசிரியர்​கள் மீண்​டும் போராட்​டத்தை தொடங்கியுள்​ளனர்.

Kannan

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

Secondary school teachers have resumed their strike after failing to reach an agreement with the Minister of Education regarding equal pay for equal work : சம வேலைக்கு சம ஊதி​யம் கோரிக்​கையை முன்​வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்​கம் (எஸ்​எஸ்​டிஏ) சார்​பில் கடந்த மாதம் .26ம் தேதி முதல் தொடர் போராட்​டங்​கள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன.

போராட்​டத்​தின் தீவிரத்தை கட்​டுப்​படுத்த எஸ்​எஸ்​டிஏ பொதுச்​செய​லா​ளர் ஜே.​ராபர்ட் உள்​ளிட்ட தலைமை நிர்​வாகி​களை போலீ​ஸார் வீட்​டுக் காவலில் வைத்​தனர்.

போராட்​டத்​தில் ஈடு​பட்ட ஆசிரியர்​களை​யும் உடனுக்​குடன் தேடி, தேடி கைது செய்​தனர். ஆனாலும் ஆசிரியர்​களின் போராட்​டம் தொடர்ந்​தது.

ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு

இந்​நிலை​யில் எஸ்​எஸ்​டிஏ சங்க நிர்​வாகி​களு​டன் பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் சென்​னை​யில் உள்ள அவரது முகாம் அலு​வல​கத்​தில் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.

தொடர்ந்து கல்​வித்​ துறை அலு​வலர்​களும், ஆசிரியர் சங்க நிர்​வாகி​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இவ்​விரு பேச்​சு​வார்த்​தைகளும் சுமார் 7 மணி நேரம் நடை​பெற்​றது.

இதையடுத்து கோரிக்​கைகள் குறித்து முடி​வெடுக்க போராட்​டக் குழு​விடம் அதி​காரி​கள் சிறிது அவகாசம் கேட்​ட​தாக கூறப்​படு​கிறது.

சமவேலை, சம ஊதியம் அரசு கைவிரிப்பு

இதையடுத்து இடைநிலை ஆசிரியர்​கள் பொங்​கல் பண்​டிகை​ அன்று மட்​டும் போராட்​டத்​தில் ஈடு​பட​வில்​லை. இந்​நிலை​யில் கோரிக்​கையை நிறைவேற்​று​வது குறித்து எந்த பதி​லும் வரவில்லை எனக்​கூறி சென்னை மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அரு​கில் இடைநிலை ஆசிரியர்​கள் மீண்​டும் போராட்​டத்​தைத் தொடர்ந்​தனர். அவர்​களை போலீ​ஸார் கைது செய்து வாக​னங்​களில் ஏற்​றினர்.

அப்​போது ஆசிரியர்​கள் காவல் துறை​யினர் இடையே தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது. கைது செய்​யப்​பட்ட ஆசிரியர்​கள் அரு​கில் இருந்த சமு​தாய நலக்​கூடத்​தில் அடைத்து வைத்து மாலை​யில்​ விடுவிக்​கப்​பட்​டனர்​.

திமுக கொடுத்த வாக்குறுதி

2021ம் ஆண்டு தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வேலைக்கான ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிட்டிருந்தது.

தேர்தல் அறிக்கை 311-ல், 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பின் நியமிக்கப்பட்ட 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் வாக்குறுதி அளித்தது.

ஆனால் நான்கரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த வாக்குறுதியானது இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

===================