ஆட்சியை கைப்பற்றிய பாஜக
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தாவை வீழ்த்தி பல வருடங்களுக்கு பிறகு பாஜக ஆட்சியை கைபற்றியுள்ளது . முதல்வராகச் சுவேந்து அதிகாரி பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து மேற்குவங்கத்தில் பாஜக பல ஆண்டுகளுக்கு பிறகு தனது ஆட்சியை நிறுவியுள்ளது
மம்தாவிற்கு எதிராக கட்சிகுள் பிளவு
தேர்தலில் தோல்வி அடைந்த திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் வெற்றி பெற்ற எம்எல்ஏ.க்கள் பலர் அக்கட்சியின் தலைவர் மம்தாவிற்கு எதிராக போர்கொடி தூக்குகின்றனர் , குறிப்பாக பாஜக.வுக்கு தாவ முயற்சித்து வருகின்றனர்.
எனினும், தற்போதைக்குத் திரிணமூல் கட்சியில் இருந்து வருபவர்களை கட்சியில் சேர்க்க வேண்டாம் என்று பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாஜகவிற்கு ஆதரவு ; கட்சியில் இருந்து நீக்கம்
மேற்கு வங்கத்தில் புதிய அட்சியை கைப்பற்றியிருக்கும் பாஜகவிற்கு ஆதரவாக ,திரிணமூல் தேசிய செய்தித் தொடர்பாளரும் மூத்த தலைவருமான ரிஜு தத்தா முன்னர் பாஜக தலைவர்களை வெகுவாகப் பாராட்டி பேசியிருந்தார் ,இது கட்சிக்குள்ளையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது
தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையின் போது தனது குடும்பத்தைக் காப்பாற்றியதற்காகப் பாஜக தலைவர்களுக்கு ரிஜு தத்தா நன்றி தெரிவித்திருந்தார்.
இது கட்சிகுள்ளையே பெரும் அதிரவலையை ஏற்படுத்தியிருந்தது .இந்த நிலையில் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, ரிஜுவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தார். இதை போல் மேலும் சிலர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இடைநீக்கம் குறித்து தெரிவித்துள்ள ரிஜு கூறியதாவது
பாஜகவிற்கு ஆதரவாக பேசியதற்காக , ரிஜு இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து ,இந்த நிலைப்பாடு குறித்து பேசிய ரிஜு ,மேற்கு வங்கத்தில் தற்போது மகாராஷ்டிர மாடல் அரசியல் அரங்கேறி வருகிறது. எங்களிடம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உள்ளது. சுமார் 50 எம்எல்ஏ.க்கள் எங்களுடன் இணைந்து செயல்படுகின்றனர். நாங்கள்தான் உண்மையான திரிணமூல் காங்கிரஸ்.
பெரும்பான்மை எம்எல்ஏ.க்கள் எங்கள் வசம் இருப்பதால், கட்சியின் சின்னத்தை நாங்களே தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் , இதனால் இது கட்சிக்குள்ளயே அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது
கட்சி பிளவு பற்றி பேசிய மம்தா
தனது கட்சி சார்ந்தவர்கள் தாக்கப்பட்டதிற்கு எதிராக போரட்டதில் ஈடுப்பட்ட மம்தா கூறியதாவது , மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகள் உள்ளன. இதில் 177 தொகுதிகளில் பாஜக முறைகேடுகளை செய்து வெற்றி பெற்றுள்ளது.
முதலில் எஸ்ஐஆர் மூலம் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்ககப்பட்டது மற்றும் தேர்தலின் போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு ஆகியவை எனக்கெதிராக நடத்தப்பட்டது என்றும் , நான் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தேன். ஆனால் முறைகேடுகளால் தோல்வி அடைந்தேன் என்றும் கூறிப்பிட்டுருந்தார்
கட்சியே எனக்கெதிராக மாறி வருகிறது
மேலும் சமீப காலமாக எனது கட்சித் தலைவர்களே துரோகிகளாக மாறி வருகின்றனர். எனக்கு எதிராகவும் திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராகவும் சதி வேலைகளைச் செய்து வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு ஒன்று சொல்கிறேன். திரிணமூல் கட்சியைக் கட்டிக்காக்க ‘செய் அல்லது செத்துமடி’ என்ற வகையில் நாம் செயல்பட வேண்டிய சூழலில் இருக்கிறோம் என்று தெரிவித்தார்
பாஜகவுக்கு எதிரான இண்டியா கூட்டணி கட்சிகள் டெல்லியில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்த உள்ளன. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
===============