Prime Minister Narendra Modi will not attend the UN General Assembly meeting 2025  
இந்தியா

டிரம்பிற்கு இந்தியா ’ஷாக்’: ஐநா கூட்டத்தை புறக்கணிக்க மோடி முடிவு

PM Narendra Modi on UN General Assembly Meeting 2025 : அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, ஐநா சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள மாட்டார் எனத் தெரிகிறது.

Kannan

ஐநா பொதுச்சபை கூட்டம் :

PM Narendra Modi on UN General Assembly Meeting 2025 : ஐநா பொதுச்சபை கூட்டம் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. 23 முதல் 29ம் தேதி வரை உயர்மட்ட பொது விவாதத்தில் உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். முதலில் பிரேசில் அதிபரின் உரையுடன் தொடங்கும் இந்தக் கூட்டத்தில் இரண்டாவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசுவார்.

ஐநா கூட்டத்தை புறக்கணிக்கும் இந்தியா? :

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐநா பொதுச்சபை(UNGA) கூட்டத்தில் இந்தியா தவறாமல் பங்கேற்று வருகிறது. கொரோனா காலம் தவிர்த்து மற்ற ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு ஐநா சபை கூட்டத்தை பிரதமர் மோடி புறக்கணிக்கிறார். அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.

டிரம்பை சந்திப்பை தவிர்க்கிறார் மோடி :

இந்தியாவுக்கு எதிராக 50 சதவீத வரியை விதித்தது மூலம், நட்புறவில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த அதிபர் டோனால்ட் டிரம்ப், அந்நாட்டு மக்களின் வெறுப்பையும் சந்தித்து வருகிறார். ஐநா சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றால், அவர் டிரம்பை சந்தித்து பேச வேண்டி இருக்கும்.

ஜெய்சங்கர் பங்கேற்கிறார் :

கூடுதல் வரி விதிப்பு, பிரிக்ஸ் அமைப்பு பிரச்சினை ஆகியவற்றுக்கு இதுவரை தீர்வு காணப்படாத நிலையில், அதிபர் டிரம்பை சந்திப்பதை தவிர்க்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். எனவே, பிரதமருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்வார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உறுதியுடன் நிற்கும் இந்தியா :

பிரதமரின் இந்த மாத பயண திட்டத்தில் அமெரிக்கா பயணம் குறித்த தகவல் ஏதும் இல்லை. தற்போதுள்ள அரசியல் சூழலில், இந்த சந்திப்பை தவிப்பது நல்லது என்று மத்திய அரசு கருதுவதாக தெரிகிறது. அந்த வகையில் அமெரிக்கா செல்லும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், 26ம் தேதி ஐநா சபை கூட்டத்தில்(UN General Assembly Meeting2025 Dates) உரையாற்றுவார்.

மேலும் :படிக்க "சீனாவிடம் இந்தியா-ரஷ்யா”வை இழந்து விட்டோம்: புலம்பும் டிரம்ப்

அமெரிக்காவுக்கு பின்னடைவு :

140 கோடி மக்கள் தொகையை கொண்ட பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி, ஐநா சபை கூட்டத்தை(UN General Assembly Meeting) புறக்கணிப்பது அமெரிக்கவின் ராஜதந்திரத்திற்கு மிகப் பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

===