'Seva Teerth' new Prime Minister's Office : Narendra Modi to move in on 15th Makar Sankranti 2026 Date in Tamil New PMO Office
இந்தியா

PMO : ’சேவா தீர்த்’ பிரதமர் அலுவலகம் : 15ம் தேதி மாறுகிறார் மோடி

PM Modi Move To New PMO Office Seva Teerth : சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக பிரதமர் அலுவலகம் ’சேவா தீர்த்’ என்கிற இடத்திற்கு மாறுகிறது.

Kannan

PM Modi Move To New PMO Office Seva Teerth on Makar Sankranti 2026 Day : 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து பிரதமர் அலுவலகம் சவுத் பிளாக்கில் செயல்பட்டு வந்தது. முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு உட்பட அனைத்து பிரதமர்களும் அங்கு இருந்து தான் பணியாற்றி வந்தனர்.

சென்டரல் விஸ்டா திட்டம்

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ், ஜனாதிபதி மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான 3 கி.மீ. தூர ராஜபாதையை மறுசீரமைக்கும் பணிகள் நடந்துள்ளன. டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் ரூ.862 கோடி செலவிலும் சென்ட்ரல் விஸ்டா அவென்யூ ரூ. 477 கோடி செலவிலும் கட்டப்பட்டன.

பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதிக்கு புதிய இல்லங்கள், பொதுவான மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

சேவா தீர்த் - பிரதமர் அலுவலகம்

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக பிரதமர் அலுவலகம் தற்போது ‘சேவா தீர்த்’(சேவைக்கான புனித தலம்) என்ற பெயரில் அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த பணிகள் அனைத்தும் முடிந்து விட்டன. பிரதமர் மோடியின் புதிய அலுவலகமும் தயாராகி விட்டது.

15ம் தேதி புதிய அலுவலகம் திறப்பு

புதிய அலுவலகத்திற்கு பிரதமர் மோடி இந்த வாரமே மாறக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி, மகர சங்கராந்தி(பொங்கல்) பண்டிகையையொட்டி அலுவலக இடமாற்றம் நடைபெறும் எனத் தெரிகிறது.

இந்த வளாகத்தில் பிரதமர் அலுவலகம், அமைச்சரவைச் செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் ஆகியவற்றை செயல்பட இருக்கின்றன. இந்த மூன்றுக்கும் தனித்தனி கட்டிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நவீன வசதிகளுடன் ‘சேவா தீர்த்’

பிரதமர் அலுவலகம் அமையவிருக்கும் புதிய கட்டிடத்திற்கு ‘சேவா தீர்த் 1’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது நவீன பணிச்சூழல்களையும், பிரம்மாண்டமான விழா அறைகளையும் கொண்டுள்ளது. பிரதமர் அலுவலகத்தின் இந்த இடமாற்றம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. .

அருங்காட்சியமாக மாற்றம்

பிரதமர் அலுவலகம் முழுமையாக ‘சேவா தீர்த்’ பகுதிக்கு மாற்றப்பட்ட பிறகு, சவுத் மற்றும் நார்த் பிளாக் கட்டிடங்கள் ‘யுகே யுகீன் பாரத் சங்கராலயா’ என்ற பொது அருங்காட்சியகமாக மாற்றப்படும்.

அருங்காட்சியகத்தின் மேம்பாட்டிற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்காக பிரான்சின் அருங்காட்சியக மேம்பாட்டு நிறுவனத்துடன் இதற்காக ஒன்றிய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

* ‘சேவா தீர்த்) வளாகம் எக்ஸிகியூட்டிவ் என்கிளேவ் என்று அழைக்கப்படும்

* இந்த பகுதி எல்&டி நிறுவனத்தால் ரூ. 1,189 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

* 2,26,203 சதுர அடி பரப்பளவை கொண்டுள்ளது.

* பிரதமரின் புதிய அதிகாரப்பூர்வ இல்லம் தற்போதைக்கு ”எக்ஸிகியூட்டிவ் என்கிளேவ் பகுதி 2 ” என்று பெயரிடப்பட்டு, அருகிலேயே கட்டப்பட்டு வருகிறது.

இது கட்டி முடிக்கப்பட்டதும், புதிய இல்லத்தில் பிரதமர் குடியேறுவார்.

===============