https://x.com/ShashiTharoor
இந்தியா

காங்கிரஸ் தலைமையுடன் கருத்து வேறுபாடு: உண்மையை ஏற்ற சசிதரூர் எம்பி

காங்கிரஸ் கட்சி தலைமையுடன் தனக்கு கருத்து வேறுபாடுகள் இருப்பது உண்மைதான் என்று சசிதரூர் தெரிவித்துள்ளார்.

MTM

கேரள மாநிலம் நிலாம்பூர் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு காங்கிரஸ் எம்பி சசிதரூக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது :

தற்போதைய காங்கிரஸ் தலைமையுடன் எனக்குத் கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஏனெனில் அவை சில ஊடகங்களிலும் வந்துவிட்டன. இது போன்ற விஷயங்களை கட்சிக்குள்ளேயே நேரில் பேசி தீர்க்க வேண்டியது சிறந்தது.

நிலாம்பூர் இடைத்தேர்தலில் நான் பிரசாரம் செய்யவில்லை, ஏனெனில் அதற்கான அழைப்பு கட்சியிடமிருந்து எனக்கு வரவில்லை.

நான் 16 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வருகிறேன். இந்தக் கட்சியின் மதிப்பீடுகளும், அதில் உள்ள கட்சியினர்கள் காட்டும் ஈடுபாடும், நேர்த்தியும், இலட்சியமும் எனக்குத் தெரியும். அதனால்தான் இக்கட்சியிடம் எனக்கு நெருக்கம் உள்ளது.

இவ்வாறு சசிதரூர் எம்பி கூறினார்.

இடைத்தேர்தல் நடத்தப்படும் நிலாம்பூர் தொகுதி, மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணியில் வெற்றி பெற்ற எம்எல்ஏ பி.வி. அன்வர் தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து காலியானது. பி.வி. அன்வர் அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.