ஷிகெல்லா தொற்று பாதிப்பில் கேரளம்
ஷிகெல்லா தொற்று பாதிப்பால் கோழிக்கோடு மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இதில், கடந்த ஜனவரியில் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது
இந்த நிலையில், கடந்த 12-ந்தேதி அர்ஜாவ் (வயது 7) என்ற சிறுவனுக்கு காய்ச்சல் மற்றும் டயோரியா பாதிப்பு ஏற்பட்டு, கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதன்பின்னர், அந்த சிறுவனுக்கு ஷிகெல்லா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி அர்ஜாவ் பலியானான்.
இந்த நிலையில், கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் வசித்து வந்த 75 வயது மூதாட்டி ஒருவர் ஷிகெல்லா தொற்றினால் மரணம் அடைந்துள்ளார்.
இதனை மாநில சுகாதார துறை இன்று தெரிவித்து உள்ளது. இதனால், கேரளாவில் ஷிகெல்லா தொற்றுக்கு மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது.
ஷிகெல்லா பரவும் தொற்றுநோய்
'ஷிகெல்லா தொற்றானது பாக்டீரியாவால் குடலில் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். இது அசுத்தமான உணவு, தண்ணீர் அல்லது பாதிக்கப்பட்ட நபர் மூலமாக மிக எளிதாகப் பரவுகிறது.
இது கடுமையான வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும் ஒரு தொற்றுநோயாகும்
பாதுகாப்பு நடவடிக்கையில் கேரள அரசு
இந்த ஷிகெல்லா தொற்று ஏற்பட்டால், டயோரியா, காய்ச்சல் மற்றும் வயிற்று பிடிப்பால் வலி போன்றவை ஏற்படும்.
கெட்டுப்போன உணவு அல்லது தண்ணீர் மற்றும் தொற்று ஏற்பட்ட நபரிடம் இருந்து இந்த நோய் பரவும் எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கேரளாவில் ஒரே நாளில் 12 பேுர் ஷிகெல்லா பாதிப்படைத்துள்ளனர். திருச்சூர் மற்றும் கண்ணூரில் தொற்று வேகமாக பரவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
தொற்று குறித்து கேரள சுகாதார துறை தகவல்
கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை 146 ஷிகெல்லா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் ,இவற்றில் 70 பேருக்கு கடந்த ஜூனில் தொற்று உறுதியாகி உள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது .
இது மொத்த பாதிப்பில் 50 சதவீதம் என்றும் .தற்போதி இது தீவிரமாக பரவி வருவதாகவும் , அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கேரளா அரசு தீவிரம் காட்டி வருகிறது.
=========================