ஒரு வாரத்தில் ரூ.4,400 அதிகரிப்பு
Gold And Silver Rate Today in Chennai : சர்வதேச சந்தை நிலவரங்கள் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. குறிப்பாக, கடந்த சில தினங்களாக காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து, இதுவரை இல்லாத வகையில் ரூ.92 ஆயிரத்தை எட்டி அதிர்ச்சி கொடுத்தது. சீனா உட்பட உலக நாடுகள் தங்க முதலீட்டை அதிகரித்து இருப்பதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இம்மாத இறுதிக்குள் தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்தை தாண்டினாலும் ஆச்சரியமில்லை. கடந்த ஒருவாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 4,400 ரூபாய் உயர்ந்து இருக்கிறது.
தங்கம் சவரன் ரூ.92,200
தமிழகத்தில் நேற்று முன்தினம் (அக்., 11) தங்கம் ஒரு கிராம் 11,500 ரூபாய்க்கும், சவரன் 92,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று (அக்.,13) தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து, 11,525 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 92,200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளி விலையும் புதிய உச்சம்
தங்கத்தைப் போல வெள்ளி விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. வாரத்தின் தொடக்க நாளான இன்று, ஒரு கிராம் வெள்ளி ரூ.5 அதிகரித்து ரூ.195க்கும், கிலோ வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ஒரு லட்சத்து 95 ஆயிரத்திற்கும் விற்பனையாகி வருகிறது.
மேலும் படிக்க : Gold Silver Price Today : தங்கம் விலை கிடுகிடு உயர்வு: வெள்ளியும் புதிய உச்சம்
அக்டோபர் ஒன்றாம் தேதி வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.1,61,000க்கு விற்பனை செய்யப்பட்டது. அக்டோபர் 13ம் தேதியான இன்று ஒரு கிலோ விலை ரூ.1,95,000 ஆக உள்ளது.
========