மேற்கு வங்கம் - அடுத்த ஆண்டு தேர்தல்
SIR Draft Roll 2025 : Over 58 lakh names deleted from West Bengal electoral rolls : மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
எஸ்ஐஆர் பணிகள்
வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் விவரங்களை சரிபார்த்து பதிவு செய்வதற்கான பணிகள் முடிந்துள்ள நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டு உள்ளது. அதற்கு முன்பாக நீக்கப்பட்ட பெயர்கள் குறித்த விவரங்கள் ceowestbengal.wb.gov.in/asd_sir என்ற இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது.
58.8 லட்சம் பேர் நீக்கம்
அதன்படி, இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், 58.8 லட்சம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 24 லட்சம் இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
1.38 லட்சம் பேர் போலி வாக்காளர்கள்
போலி வாக்காளர்கள் 1.38 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. நிரந்தரமாக இடம்பெயர்ந்த 19 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள்.
12 லட்சத்து 1,462 வாக்காளர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், மூன்று முறை தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாததால், பெயர்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜனவரி 15 வரை விண்ணப்பிக்கலாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுப்பதாக யாரேனும் பாதிக்கப்பட்டு இருந்தால், இன்று முதல் ( டிசம்பர் 16, 2025 ) ஜனவரி 15ம் தேதி வரை ( 15-01-2026 ) வரை படிவம் 6 உடன் உறுதிமொழிப்படிவம் மற்றும் துணை ஆவணங்களை இணைத்து தங்கள் பெயர்களை சேர்க்கக் கோரலாம் என தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 பிப்.14ல் இறுதி வாக்காளர் பட்டியல்
இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14ம் தேதி வெளியிடப்படும். அதில் இடம்பெறும் வாக்காளர்கள் மட்டுமே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மேற்குவங்க சட்டசபை தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து திரிணாமூல் ஆட்சி
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. நடைபெற்று வருகிறது. அதன் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். 2011முதல் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தல்களில் திரிணாமூல் தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வருகிறது.
2026ல் அரியணை யாருக்கு?
நான்காவது முறையும் வாகை சூடி, ஆட்சியை தக்க வைக்க முதல்வர் மம்தா, வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார். இந்தமுறை ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் பாஜகவும் களமிறங்கி இருக்கிறது.