வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்
SIR Final Voter List 2026 Puducherry : பீகாரில் நடைபெற்று முடிந்த தேர்தலை தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு,புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம்
குறிப்பாக இந்த தேர்தலுக்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை, தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும். இதனை தேர்தல் ஆணையம் நடத்தியது.
புதுச்சேரியில் எஸ்ஐஆர் பணிகள்
தமிழ்நாடு உட்பட 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த மாதம் 4 ஆம் தேதி முதல் இந்த சிறப்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLO) இந்தப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல்
வாக்காளர்கள் பூர்த்தி செய்து அளித்த விண்ணப்பங்களை, பி.எல்.ஓக்கள் வீடு வீடாகச் சென்று சேகரித்தனர். பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது.
மொத்த வாக்காளர்கள் 7,88,696
இந்த சூழலில், புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன். புதுச்சேரியில் மட்டும் 7.66 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
பெண் வாக்காளர்கள் அதிகம்
இதில் ஆண்கள் 3,70,955 பேர், பெண்கள் 4,17,620 பேர், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் உள்ளனர்.
85,530 பேர் நீக்கம்
வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 85,530 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதாவது, சுமார் 10 சதவீதம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
22,452 புதிய வாக்காளர்கள் சேர்ப்பு
புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளில் 22,452 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலுக்கு பிறகு புதுச்சேரியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7,88,696 ஆக உள்ளது.
புதுச்சேரி, காரைக்கால் என மொத்தமுள்ள 30 தொகுதிகளில் மொத்த பேர் 9,44,111. புதுச்சேரியில் 4,43,495 ஆண் வாக்காளர்களும் 5,00,477 பெண் வாக்காளர்களும் உள்ளனர். புதுச்சேரியில் மூன்றாம் பாலினத்தவர்கள் 139 பேர் உள்ளனர் என மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.
பெரிய தொகுதி வில்லியனூர்
வில்லியனூர் தொகுதியில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர்.
சிறிய தொகுதி ராஜ்பவன்
அதேநேரம், ராஜ்பவன் தொகுதியில் குறைந்த எண்ணிக்கையிலான வாக்காளர்கள் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
===================