பண்டிகைக்கால சிறப்பு ரயில்கள்
Special Trains for Christmas, New year : கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக் காலங்களில் பயணிகளின் கூட்டத்தைச் சமாளிக்க, தெற்கு ரயில்வே நாகர்கோவில் மற்றும் மட்காவ் சந்திப்பு இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் சேவைகளை இயக்க உள்ளது. மேலும் தூத்துக்குடி மற்றும் மைசூரு இடையே சிறப்பு ரயில் சேவைகளை அறிவித்துள்ளது.
மைசூரு-தூத்துக்குடி சிறப்பு ரயில்
மைசூரு-தூத்துக்குடி சிறப்பு ரயில் (ரயில் எண் 06283) டிசம்பர் 23 மற்றும் 27 ஆம் தேதிகளில் இயக்கப்படும். மைசூருவிலிருந்து மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடியை வந்துசேரும்.
தூத்துக்குடி-மைசூரு சிறப்பு ரயில் (ரயில் எண் 06284), டிசம்பர் 24 மற்றும் 28 ஆம் தேதிகளில் இயக்கப்படும். தூத்துக்குடியிலிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.45 மணிக்கு மைசூருவை சென்றடையும்.
நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
ஆன்லைன் தளங்கள் மற்றும் முன்பதிவு கவுண்டர்கள் உள்ளிட்ட வழக்கமான சேவைகள் மூலம் டிசம்பர் 10ம் தேதி காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும்.
நாகர்கோவில் - மட்கான் சிறப்பு ரயில்
நாகர்கோவில் சந்திப்பு - மட்கான் சிறப்பு ரயில் (ரயில் எண் 06083) செவ்வாய்க்கிழமைகளில் (டிசம்பர் 23 மற்றும் 30, 2025 மற்றும் ஜனவரி 6, 2026) காலை 11.40 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.50 மணிக்கு மட்கான் சந்திப்பு நிலையத்தை வந்தடையும்.
மட்கான்-நாகர்கோவில் சந்திப்பு சிறப்பு ரயில் (ரயில் எண் 06084) புதன்கிழமைகளில் (டிசம்பர் 24 மற்றும் 31, 2025 மற்றும் ஜனவரி 7, 2026) காலை 10.15 மணிக்கு மட்கான் சந்திப்பிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பை அடையும்.
மங்களூர் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்
மங்களூர் சந்திப்பு - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (06041) ஞாயிற்றுக்கிழமைகளில் (டிசம்பர் 7, 14, 21, மற்றும் 28, 2025, மற்றும் ஜனவரி 4, 11 மற்றும் 18, 2026) மாலை 6 மணிக்கு மங்களூர் சந்திப்பிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6.30 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு வந்தடையும்.
மறுநாள், திருவனந்தபுரம் வடக்கு - மங்களூர் சந்திப்பு வாராந்திர சிறப்பு ரயில் (06042) திருவனந்தபுரத்தில் இருந்து திங்கள்கிழமைகளில் (டிசம்பர் 8, 15, மற்றும் 22, 2025, மற்றும் ஜனவரி 5, 12 மற்றும் 19, 2026) காலை 8.30 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் இரவு 8.30 மணிக்கு மங்களூர் சந்திப்பை அடைந்துவிடும்.
சார்லப்பள்ளி-கொல்லம் சிறப்பு ரயில்
சார்லப்பள்ளி-கொல்லம் சிறப்பு ரயில் (ரயில் எண் 07119) புதன்கிழமைகளில் (டிசம்பர் 17 மற்றும் 31) காலை 10:30 மணிக்கு சார்லப்பள்ளியில் இருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 10 மணிக்கு கொல்லத்தை அடையும்.
கொல்லம்-சார்லப்பள்ளி சிறப்பு ரயில் (ரயில் எண் 07120) வெள்ளிக்கிழமைகளில் (டிசம்பர் 19, 2025 மற்றும் ஜனவரி 2, 2026) அதிகாலை 2:30 மணிக்கு கொல்லம் சந்திப்பு நிலையத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 1:20 மணிக்கு சார்லப்பள்ளியை அடையும்.
சிறப்பு ரயில்கள் - பயணிகளுக்கு அறிவுரை
சிறப்பு ரயில் குறித்த கூடுதல் தகவல்களுக்கு, பயணிகள் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.enquiry.indianrail.gov.in ஐப் பார்வையிடலாம், NTES செயலியைப் பயன்படுத்தலாம் அல்லது 139 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-================