Southwest monsoon intensifies: Heavy rains lash Delhi, Maharashtra, and Gujarat google
இந்தியா

தென்மேற்கு பருவமழை தீவிரம் : டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத்தில் வெளுத்து வாங்குகிறது : ஆறுகளில் வெள்ளம், பலி உயர்வு...

டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, உத்தராகண்ட், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது

Rohini

தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை

தென்மேற்கு பருவமழை எதிரொலியின் காரணமாக , நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் அகிய பகிதிகளில் தீவைரமாக மழையானது பெய்து வருகிறது

குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்

தீவிரமான மழை பெய்து வருவதால் அந்த மாநிலங்களில் பல்வேறு இடங்களில் தீவிரமான மழையானது பெய்து வருகிறது , இதனால் பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளமானது சூழ்ந்துள்ளது

டெல்லியை சூழ்ந்த வெள்ளம், 3 பேர் பலி

தலைநகர் டெல்லியில் நேற்று ஒரே இரவில் அதிக மழை பெய்ததை அடுத்து, பல இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது

ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு

இந்த நிலையில் டெல்லியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம், இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் மின்னல் தாக்கக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

அதிகபட்ச மழை பதிவு

காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியின் மயூரி விஹாரில் 102 மிமீ மழையும், பூசாவில் 83 மிமீ மழையும், லோதி சாலையில் 80 மிமீ மழையும், சஃப்தர்ஜங் பகுதியில் 72.6 மிமீ மழையின் அளவாக இதுவரை பதிவாகியுள்ளது பாதிவாகியுள்ளது.

சூரத்தை சூழ்ந்த வெள்ளப்பெருக்கு

குஜராத்தின் சூரத் நகரில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக 9 பேர் உயிரிழந்துள்னர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

வெள்ளத்தில் ஸ்தம்பிக்கும் குடியிருப்பு பகுதிகள்

கடுமையான வெள்ளம் சூழ்ந்திருப்பதால , கட்டிடங்களில் சிக்கியிருந்த மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன. மழை தொடர்ந்து பெய்து வருவதால் நகரின் பல பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நட்ந்து வருகின்றன

காஷ்மீர் ராஜாஸ்தானிலும் கனமழை

பருவமழை தீவிரத்தின் காரணமாக ஜம்மு காஷ்மீரின் டோடா மாவட்டத்தின் சில பகுதிகளில் பெய்த திடீர் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை

வெள்ளம் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது மேலும் இயற்கைச் சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து முதல்வர் ஒமர் அப்துல்லாவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டு உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்

===================