குளிர்கால கூட்டத்தொடர்
Vande Mataram Debate in Parliament Winter Session 2025 : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் 14க்கும் மேற்பட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதனால் இரு அவைகளிலும் மசோதா மீதான விவாதங்கள் நடந்து வருகிறது.
வந்தே மாதரம் 150வது ஆண்டு விழா
நமது நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடல் எழுதப்பட்டு 150வது ஆண்டு நிறைவு பெறுகிறது. இதை கொண்டாடும் விதமாக, மக்களவையில் சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது.
மோடி துவக்கி வைக்கிறார்
பிரதமர் மோடி சிறப்பு விவாதத்தை தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார். சிறப்பு விவாதத்தில் பங்கேற்க பாஜ எம்பிக்களுக்கு 3 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விவாதத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டாவது பேச்சாளராக இருப்பார்.
சிறப்பு விவாதம்
காங்கிரஸ் எம்பிக்கள் கவுரவ் கோகோய், பிரியங்கா, தீபேந்தர் ஹூடா, மணிப்பூர் எம்பி பிமோல் அகோய்ஜாம் மற்றும் பிரணிதி ஷிண்டே உள்ளிட்டோர் பங்கேற்பார்கள். வந்தே மாதரம் பாடல் தொடர்பான பல முக்கியமான விஷயங்கள் அறியப்படாத தகவல்கள் தெரியவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜ்யசபாவில் நாளை விவாதம்
ராஜ்யசபாவில் நாளை (டிசம்பர் 09) வந்தே மாதரம் பாடல் குறித்த விவாதம் நடைபெறும், உள்துறை அமைச்சர் அமித் ஷா விவாதத்திற்கு தலைமை தாங்குவார். மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜே.பி. நட்டா இரண்டாவது பேச்சாளராக இருப்பார்.
வந்தே மாதரம் பாடல்
தேசிய பாடலாக போற்றப்படும் வந்தே மாதரம் பாடலை, பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றினார் 1875-ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி பங்காதர்ஷன் என்ற வங்கமொழி இலக்கிய இதழில் வெளியிடப்பட்டது. 1882ம் ஆண்டு ஆனந்த மடம் நாவலிலும் வந்தே மாதரம் பாடல் இடம் பெற்றுள்ளது. வந்தே மாதரம் பாடலுக்கு ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்துள்ளார்.
வந்தே மாதரம் சிறப்புகள் :
* நாட்டின் ஒருமைப்பாடு, தியாகம், பக்தி ஆகியவற்றை வலியுறுத்துகிறது
*வந்தே மாதரம் பாடலில் இந்து தெய்வங்கள் குறித்து இடம் பெற்றிருந்ததால் மதச்சார்பற்ற ஜன கண மன பாடல், நாட்டுப் பண்ணாக தேர்வு
* வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவை நாடு முழுவதும் கொண்டாட மத்திய அமைச்சரவைக் ஒப்புதல்
====