காங்கிரசில் மம்தா பானர்ஜி
இந்திய அரசியல் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி வருபவர் மம்தா பானர்ஜி. காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர், மார்க்சிஸ்ட் கோட்டையான மேற்கு வங்கத்தை காங்கிரஸ் பிடிக்க வேண்டும் என்று விரும்பினார்.
மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
1997, 1982, 1987, 1991, 1996 என்று தொடர்ந்து 5 சட்டமன்ற தேர்தல்களில் மார்க்சிஸ்ட் வெற்றி பெற, 5 முறையும் ஜோதி பாசு தான் முதல்வராக இருந்தார்.
1998ம் ஆண்டிலும் அவர் முதல்வராக இருந்தார். எனவே, கம்யூனிஸ்டை வீழ்த்த வேண்டும் என்று உறுதிபூண்ட மம்தா காங்கிரஸ் தலைவர்களிடம் இதுபற்றி எடுத்துரைத்தார்.
காங்கிரஸ் மீது அதிருப்தி, விலகல்
ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. மார்க்சிஸ்ட்டோடு மென்மையான அணுகுமுறையை கடைபிடித்தனர். சாப்ட்டாக செயல்பட்டனர்.
காங்கிரஸ் கட்சியினர் மேற்கு வங்க மாநில கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் ரகசிய உடன்பாடு வைத்திருப்பதாக சந்தேகித்த மம்தா, மேற்குவங்க அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க முயன்றார்.
தனிக்கட்சி கண்ட மம்தா
ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் தடையாக இருக்க, கடுப்பான மம்தா, தனி கட்சி தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்தார். இதையடுத்து 1998 ஜனவரி 1ம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை மம்தா பானர்ஜி தொடங்கினார்.
13 ஆண்டுகள் போராடிய மம்தா
ஆனால் மார்க்சிஸ்ட் கோட்டையை அசைக்கவே முடியவில்லை. இருப்பினும் மம்தாவின் தொடர் முயற்சிகளுக்கு 13 ஆண்டுகள் கழித்து, 2011 சட்டசபை தேர்தலில் விடை கிடைத்தது.
முதல்வரான மம்தா பானர்ஜி
தேர்தலில் திரிணாமூல் அமோக வெற்றிபெற மம்தா பானர்ஜி முதல் முறையாக மேற்குவங்க முதல்வரானார். அதன்பிறகு அவரது ஆக்ரோஷ அரசியலில் மேற்கு வங்க அரசியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம் தெரியாமல் போனது.
15 ஆண்டுகள் முதல்வராக மம்தா
இதன்காரணமாக மூன்றுமுறை 2011, 2016, 2021 சட்டம்ன்ற தேர்தல்களில் திரிணாமூல் அமோக வெற்றி பெற, 15 ஆண்டுகள் முதல்வராக இருந்தார் மம்தா. ஆட்சி மாறியதும் மேற்குவங்கத்தில் காட்சிகள் மாறி வருகின்றன.
திரிணாமூல் காங்கிரசில் பிளவு
இதுவரை இரும்பு பெண்மணி என்று அழைக்கப்பட்டு வந்த, மம்தாவை திரிணாமூல் நிர்வாகிகள் எதிர்க்க தொடங்கியது. 60 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட, இரண்டாக உடைந்தது திரிணாமூல்.
எம்பிக்கள் எதிர்ப்பு
மற்றொரு பக்கம் 19 லோக்சபா எம்பிக்கள், 3 ராஜ்யசபா எம்பிக்கள் பாஜக ஆதரவு நிலைப்பாட்டோடு இருக்கிறார்கள்.
மம்தாவுக்கு பெரும் பின்னடைவு
எனவே, பெரும் பின்னடவை மம்தா பானர்ஜி சந்தித்து வருகிறார். இதன் காரணமாகவே இண்டியா கூட்டணி கூட்டத்தில் வலியச் சென்று பங்கேற்றார் மம்தா.
காங்கிரசோடு இணையும் மம்தா?
கட்சிக்குள் ஏற்பட்டு இருக்கும் பூசல்கள், அவரது தலைமைக்கு விடுக்கப்பட்ட சவாலாக பார்க்கப்படுகிறது. இதை சமாளிக்க திரிணாமூலை தாய்க்கட்சியான காங்கிரசுடன் இணைக்க மம்தா முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது,
காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை
இண்டியா கூட்டணி கூட்டத்திற்கு பிறகு அவர் இன்னும் கொல்கத்தா செல்லவில்லை. டெல்லியில் தான் தங்கி இருக்கிறார். காங்கிரஸ் மூத்த தலைவர்களை மம்தா சந்தித்து ஆலோசனை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
பாஜகவை எதிர்க்க காங்கிரஸ்...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்க்க 1998ல் காங்கிரஸ்க்கு குட்பை சொன்ன மம்தா தற்போது பாஜகவை எதிர்க்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க திட்டமிட்டு காய்நகர்த்தி வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
=======================