Startling data has emerged revealing that 35 percent of the students taking the NEET exam come from just three states google
இந்தியா

NEET Exam : 3 மாநிலங்களில் 35% மாணவர்கள் : முதலிடத்தில் தமிழகம், 1.42 லட்சம் பேருடன் தமிழகம் 6வது இடம்...!

நீட் தேர்வினை மூன்று மாநிலங்களில் இருந்து மட்டும் 35 சதவீத மாணவர்கள் எழுதுவதாக திடுக்கிடும் தரவுகள் வெளியாகி இருக்கின்றன.

Kannan

நீட் நுழைவுத்தேர்வு

நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு (NEET UG) நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வினை எழுத 22.7 லட்சம் விண்ணப்பித்தனர்.

நீட் தேர்வு ரத்து

மே 3ம் தேதி நாடு முழுவதும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. வினாத்தாள் கசிவு புகார் பூதகரமாக வெடித்த நிலையில், தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து வரும் 21ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட உள்ளது. கூடுதல் பாதுகாப்பு அம்சங்களோடு தேர்வினை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

பலத்த பாதுகாப்புடன் நீட் தேர்வு

முதன்முறையாக ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம், வினாத்தாள்கள் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சுமார் 5 லட்சம் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

3 மாநிலங்கள், 35% மாணவர்கள்

இந்தநிலையில், நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் தொடர்பான தரவுகள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி, தேர்வு எழுதும் 35% பேர் வெறும் 3 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அதிகபட்சமாக உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் இந்த எண்ணிக்கையில் முன்னணியில் உள்ளன.

முதலிடத்தில் உத்தரபிரதேசம்

உத்தரபிரதேசத்தில் இருந்து 3 லட்சத்து 56 ஆயிரம் பேர் தேர்வு எழுத இருக்கிறார்கள். அதன்படி, 15.7% ஆகும். அடுத்ததாக, மகாராஷ்டிரத்தில் இருந்து 2.22 லட்சம் பேர், அதாவது 9.8%. ராஜஸ்தானில் இருந்து 2.03 பேர், 8.9 சதவீதம் பேர் நீட் தேர்வினை எழுதுகின்றனர்.

தேசிய அளவிலான மொத்த விண்ணப்பதாரர்களில் பெரும் பகுதியை இந்த மாநிலங்கள் பெறுகின்றன.

6வது இடத்தில் தமிழகம்

பிகார் (1,56,061), கர்நாடகா (1,45,466) மற்றும் தமிழ்நாடு (1,42,489) அடுத்தடுத்த இடத்தில் இருக்கின்றன.

இந்தமுறை நீட் தேர்வு எழுத மாணவர்களுக்கு கூடுதலாக 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

=====