Stock Market Today Update Loss of 13 lakh crores, fall in rupee value, worst stock market fall of the year 2026 google
இந்தியா

13 லட்சம் கோடி இழப்பு : ரூபாய் மதிப்பு வீழ்ச்சி : "இந்த ஆண்டின் மிக மோசமான பங்குச்சந்தை சரிவு"

Stock Market Today Update in India : உலக நாடுக்ளின் போர் பதற்ற சூழலால் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி கண்டுள்ளது,இது இந்த ஆண்டின் மிக மோசமான சரிவாகும்

Rohini

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

Stock Market Today Update in India : ஈரான் இஸ்ரேல் அமெரிக்கா போர் நீடித்து வருவதல் உலக வர்த்தகமானது கடும் வீழ்ச்சியை வரலாறு காணாத அளவுக்கு சரிவை கண்டுள்ளது. ஈரான் - ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 111 டாலருக்கு மேலாக உச்சம் கண்டிருக்கும் நிலையில் இது, சர்வதேச அளவில் பொருளாதாரச் சூழல்களை உலுக்கி வருகிறது.

13 லட்சம் கோடி இழப்பு

இந்த ஆண்டின் மிக மோசமான பங்குச்சந்தை சரிவாக இது அமைத்திருக்கிறது .இது வரை இல்லாத அளவுக்கு உலக பங்கு சந்தையானது சரிவை சந்தித்து,3 லட்சம் கோடி வரி இழப்புகளை சந்தித்துள்ளது

இன்றைய மும்பை பங்குச் சந்தையின் நிலவரம்

அதன்படி மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 1,953.21 புள்ளிகள் சரிந்து 74,750.92 ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 580.05 புள்ளிகள் சரிந்து 23,197.75 ஆக இருந்தது.

இந்திய பங்குச் சந்தை சரிவு

இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிட்டப்பட்ட நிறுவனப் பங்குகள் அனைத்துமே கடும் சரிவை சந்தித்துள்ளது . இந்தச் சரிவால் இன்று ஒரே நாளில் 13 லட்சம் கோடி வரை இழப்பானது முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

சரிவை சந்தித்த வர்த்தகம்

மும்பை பங்குச் சந்தையில் இன்று முற்பகல் சென்செக்ஸ் 1,718.62 புள்ளிகள் சரிந்து 74,985.51 ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 523.90 புள்ளிகள் சரிந்து 23,253.90 ஆகவும் இருந்தது.

அதன்பின், பிற்பகல் 2.30 மணியளவில் சென்செக்ஸ் 2,117.60 சரிந்து 74,586.53, நிஃப்டி 672.65 புள்ளிகள் சரிந்து 23,105.15 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது

=======================