https://x.com/Rana37255/status/
இந்தியா

ஈரான் கையில் ஹார்முஸ் நீரிணை : மூடினால் இந்தியாவுக்கு பாதிப்பு

ஹார்முஸ் நிரிணை பகுதியை ஈரான் மூடினால், உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் 20 சதவீதம் பாதிப்படும் நிலை உருவாகி உள்ளது.

Kannan

ஹார்முஸ் நீரிணை ஈரான் மற்றும் ஓமனுக்கு இடையே அமைந்து இருக்கிறது.

பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவை இது இணைக்கிறது. இவை, அரபிக் கடலில் கலக்கின்றன.

எனவே ஹார்முஸ் ஜலசந்தி, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் போன்ற எண்ணெய் உற்பத்தி நாடுகள் மற்றும் அதை சுற்றியுள்ள நாடுகளுக்கு மிகவும் முக்கியமானதாக திகழ்கிறது.

இந்த நீரிணை மிகவும் குறுகிய ஒன்று. 33 கி.மீ. அகலம் மட்டுமே கொண்டது.

அதிலும், கப்பல்கள் செல்லும் பகுதி, 3 கி.மீ. துாரம் மட்டுமே கொண்டது.

எனவே, இந்த வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களை ஈரானால் தடுக்கவும் முடியும், தாக்கவும் முடியும்.

உலகளாவில் ்கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 20 சதவீதம் இந்த வழித்தடம் வழியாகவை நடைபெறுகிறது.

அதாவது நாளொன்றுக்கு 1.8 கோடி பேரல் கச்சா எண்ணெய், கப்பல்கள் மூலம் ஹார்முஸ் நீரிணை வழியாக கொண்டு செல்லப்படுகிறது.

எனவே, ஈரான் இந்த நீரிணையை மூடினால், கச்சா எண்ணெய் போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்படும்.

இது உலகளவில் கச்சா எண்ணெய் விலையேற்றத்துக்கு வழிவகுக்கும்.

இந்தியா 40 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் 50 சதவீத இயற்கை எரிவாயுவை ஹார்முஸ் நீரிணை வாயிலாகவே பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

====