ANI
இந்தியா

மகனின் சாதனை : ஆனந்தக் கண்ணீரில் சுபான்ஷு பெற்றோர்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்திய விண்வெளி வீரர்.சுபான்ஷு சுக்லாவின் பெற்றோர் ஆனந்த கண்ணீர் வடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

S Kavitha

41 ஆண்டுகளுக்குப் பின் விண்வெளிக்கு செல்லும் முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றுள்ள நிலையில், அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஃபால்கன் 9 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டவுடன் சுபான்ஷு சுக்லாவின் பெற்றோர் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

சுபான்ஷு சுக்லாவின் தாயார் ஆஷா சுக்லா கூறுகையில், ”இது ஆனந்த கண்ணீர், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என்றும் கூறினார்.

சுபான்ஷு சுக்லாவின் சகோதரி நிதி மிஸ்ரா, இந்த அனுபவம் நன்றாக இருந்தது. இப்போது வரை எல்லா நிலைகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

ஜெய்ஹிந்த்...ஜெய்ஹிந்த்.. என்ற முழக்கத்துடன் விண்வெளி பயணத்தை தொடங்கிய சுபான்ஷு சுக்லாவின் தேசப்பற்று அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.