ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்பட்டு வரும் உயர் நீதிமன்றங்கள், அம்மாநிலத்தில் உச்சபட்ட நீதித்துறை அமைப்பாக கருதப்படுகின்றன. பொதுவாக உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை பரிந்துரை செய்ய 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற கொலிஜியம் என்ற அமைப்பு உள்ளது.
நீதிபதிகள் தேர்வில் மாற்றம் :
இந்தக்குழு நீதிபதிகளின் பணி விபரங்கள் அடங்கிய குறிப்புகளை மட்டுமே பார்த்து அவர்களை தேர்வு செய்து வந்தது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பண பைகள் சிக்கிய விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, நீதிபதிகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட 3 மூத்த நீதிபதிகள் நேர்காணல் நடத்தி பரிந்துரைக்கு தேர்வு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
நேர்காணல் மூலம் நீதிபதிகள் தேர்வு :
மத்தியப்பிரதேசம், அலகாபாத், பாட்னா உயர் நீதிமன்றங்களுக்கு காலியாக உள்ள இடங்களை நிரப்ப நீதிபதிகளை பரிந்துரைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. அதற்கான நேர்காணல் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வெளிப்படையான நியமனம் :
தற்போது 25 உயர்நீதிமன்றங்களில் 371 நீதிபதிகள் காலியிடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. நேர்காணல் நடத்தப்படுதால், நீதிபதிகள் அனுபவம், பணித்திறன் உள்ளிட்டவற்றை குழுவால் நேரடியாக தெரிந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட சூழலில் தகுதியானவர்களை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க முடியும் எனக் கருதப்படுகிறது.
======