supreme court condemn karnataka government for cauvery water issue with Tamilnadu people  Ai Generated
இந்தியா

கர்நாடகாவிற்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு உடனே தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க உத்தரவு...

கர்நாடக அரசு தொடர்ந்து உச்சநீதிமன்றத்தையும் காவேரி ஒழுங்கற்று குழுவையும் அவமதிப்பதாக கருத்து ...

NARENDRAN K

காவிரி நீர் விவகாரம் தமிழ்நாடு VS கர்நாடக :

தொடர்ந்து தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் காவிரி நதி நீர் பங்கு தொடர்பாக முரண்பாடுகள் மற்றும் பிரச்னை ஏற்பட்டு வருகின்ற சூழலில்

சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை அறிவித்திருந்தது அதில் அவர்கள் காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசின் மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC) வழங்கிய உத்தரவுகளை கர்நாடக அரசு முழுமையாக பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியது.

தமிழக அரசு தாக்கல் செய்த மனு :

தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், கர்நாடகா மாநிலம் காவிரி நீர் பகிர்வு உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்தவில்லை என்றும், தமிழகத்திற்கு சுமார் 26.954 டிஎம்சி நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதையடுத்து உடனடியாக நீர் திறக்க உத்தரவிட வேண்டும் என தமிழகம் கோரிக்கை வைத்தது.

காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு :

இதற்கு முன்பாக, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கர்நாடகா மாநிலம் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் 12,000 கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவையே காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் உறுதி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

கர்நாடக அரசு தரப்பு வாதம் :

கர்நாடக அரசு தரிப்பில் ஆஜரான வழக்கறிஞர் பெங்களூரு குடிநீர் தேவை மற்றும் அங்கு இருக்க கூடிய வறட்சி என பல்வேறு விசியங்களை முன்னிறுத்தி வாதித்தபோதிலும் உச்சநீதிமன்றம் அதனை ஏற்க மறுத்து தமிழகத்திற்கு சாதகமாக உத்தரவிட்ட நிலையில் ,கர்நாடக அரசு தனது விவசாயிகளின் நலனையும் சட்டப்பூர்வ கடமைகளையும் சமநிலைப்படுத்த வேண்டிய நிலை இருப்பதாக தெரிவித்திருந்தாலும், சட்டப்படி வழங்கப்பட்ட உத்தரவுகளை மதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் :

CWMA உத்தரவுகளை கர்நாடகா பின்பற்ற வேண்டும் என அறிவுரை.

தமிழகத்திற்கு 26.954 டிஎம்சி நீர் பற்றாக்குறை இருப்பதாக மனுவில் குற்றச்சாட்டு.

தினமும் 12,000 கனஅடி நீர் திறக்க CWRC ஏற்கனவே உத்தரவு.

காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு முக்கிய முன்னேற்றம்.