Supreme Court Decision on SIR in West Bengal Not Allow Any Change on SIR Process SC Warns State Government Latest News in Tamil Source : Google
இந்தியா

எஸ்ஐஆர் பணி எவ்வித மாற்றமும் இல்லை : சுப்ரீம் கோர்ட் அதிரடி

Supreme Court Decision on SIR in West Bengal : எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்துவதை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது, என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

Rohini

உச்ச நீதிமன்ற நடவடிக்கை

Supreme Court Decision on SIR in West Bengal : 'எஸ்.ஐ.ஆர்., எனப்படும், சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியல்பணிகளுக்கு தடை ஏற்படுத்துவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது எனவும் இதை அனைத்து மாநிலங்களும் புரிந்து கொள்ள வேண்டும் என, உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மம்தாவின் பொதுநல வழக்கு

எஸ்.ஐ.ஆர்., எனப்படும், சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் பணிகளுக்கு தொடக்கம் முதலே மேற்குவங்கம் கடுமையாக எதிர்த்து வந்தது.

குறிப்பாக அம்மாநில முதல்வர் எஸ்.ஐ.ஆர் கு எதிராக பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

வழக்கின் பின்னணி

இந்த விவகாரத்தில், தேர்தல் கமிஷனுக்கு எதிராக திரிணமுல் காங். உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

முதல்வர் மம்தாவும் தனியாக பொதுநல வழக்கு தொடர்ந் நிலையில் , உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

நீதிபதி உத்தரவு

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கான காலக்கெடு பிப்., 14 வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஆவணங்களைச் சரிபார்க்க கூடுதல் காலம் தேவைப்படுவதால், இந்தத் தேதியை மேலும் ஒரு வாரம் நீடிக்க வேண்டுமானால் அவகாசம் தரலாம் என்றும் தெரிவித்தார் .

எந்த மாற்றமும் செய்யப்படாது

இந்த விவகாரத்தில் தேவையான உத்தரவையோ அல்லது நடவடிக்கை வழிமுறைகளையோ நாங்கள் பிறப்பிப்போம். ஆனால், எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் இதை அனைத்து மாநிலங்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்தார்.