The Supreme Court has granted permission to euthanize Harish Rana, who has been inactive for the past 13 years.  google
இந்தியா

13 ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருக்கும் இளைஞர் : ”கருணைக் கொலை”, முதன்முறையாக உச்ச நீதிமன்றம் அனுமதி

கடந்த 13 ஆண்டுகளாக செயலற்ற நிலையில் உள்ள ஹரிஷ் ராணா என்பவரை கருணைக் கொலை செய்ய, உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது

Rohini

வழக்கு பிண்ணனி

கடந்த 2013ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் மொகாலியில் உள்ள தனது கல்லூரியின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்த ஹரிஷ் ராணா, என்பவர் அதற்கு பின்பு தனது சுயநினைவாற்றல் அற்று சிகிச்சையில் இருந்து வருகிறார் .

அவரது தந்தை அசோக் ராணா, தனது மகனின் துன்பத்தைப் பார்க்க முடியாமலும், சிகிச்சைக்குத் தேவையான நிதி வசதி இல்லாததாலும், மகனைத் தானாக மரணிக்க அனுமதிக்க வேண்டும் (Passive Euthanasia) என்று நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

வரலாற்றில் புதிய தீர்ப்பு

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஜேபி பர்திவாலா, கேவி விஸ்வநாதன் அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹரீஷ் ராணாவின் உயிர்காக்கும் கருவிகளை அகற்றி கருணை கொலை செய்ய அனுமதி வழங்கியது.

மேலும் வீட்டில் உள்ள ஹரீஷ் ராணாவை ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வந்து எய்ம்ஸ் டாக்டர்கள் முறையான வழிமுறைகளை பின்பற்றி அவருக்கு உயிர் நீக்க சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கின. இந்த தீர்ப்பு வரலாற்றில் புதிய திருப்பமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது

மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

கடந்த 13 ஆண்டுகளாக ஹரீஷ் ராணாவை பாதுகாத்த அவரது பெற்றோருக்கு உச்சநீதிமன்றம் பாராட்டுகளை தெரிவித்தது மட்டுமல்லாமல் கருணை கொலை தொடர்பான சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது .

அதோடு, இதுபோன்ற வழக்குகள் வரும்போது அதனை கையாள நாடு முழுவதும் விரிவான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் உயிர் நீக்க சிகிச்சை முறையில் ஒருவர் கருணை கொலை செய்யப்படுவது நாட்டிலேயே இதுதான் முதல் முறையாகும்.