Supreme Court lashed out, questioning lathi-charge could be carried out against them when there is right to protest  generated
இந்தியா

”உச்சநீதிமன்றம் விளாசல்” : போராட அனைவருக்கும் உரிமை, ஆர்ப்பாட்டம் நடத்தினால் தடியடியா? : போலீசார் மீது அதிருப்தி..!

போராடுவதற்கு உரிமை இருக்கு அப்படி இருக்க, அவர்கள் மீது தடியடி நடத்துவதா என்று உச்சநீதிமன்றம் விளாசி இருக்கிறது.

Kannan

டெல்லியில் சிஜேபி போராட்டம்

நீட் வினாத்தாள் மோசடி தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி ஜந்தர் மந்தர் தொடங்கி நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

போலீசார் தடியடி

இந்தப் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

போலீசாரின் அடக்குமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

தடியடி - உச்சநீதிமன்றம் விசாரணை

தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு இந்த வழக்குகள் மீது இன்று விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதிகள் அமர்வு தெரிவித்த முக்கிய கருத்துகள்...

* அமைதியான முறையில் போராட்டம் நடத்துகிற உரிமையை அரசியல் சாசனம் வழங்கி இருக்கிறது.

* அமைதியான முறையில் போராடுவதற்கான உரிமைக்கு அரசியல் சாசனம் உத்தரவாதமாக அளித்துள்ளது.

* மக்களின் போராடும் உரிமையை மறுக்க முடியாது.

* போராட்டம் நடத்தப்படுகிறது; போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதற்காகவே மட்டும் போலீசார் அத்துமீறி நடப்பதை நியாயப்படுத்த முடியாது.

* அப்படி அத்துமீறிய சம்பவங்களை விசாரிக்க வேண்டும்.

* போராட்டங்களின் போது காவல்துறையினர் தாக்கப்பட்டுள்ளது கவலையளிக்கிறது.

* அமைதியான போராட்டங்களை நடத்த முறையான இடம் ஒதுக்கீடு செய்து தருவது உள்ளிட்ட சில நெறிமுறைகள் அவசியமானது.

* இது டெல்லிக்கு மட்டுமான பிரச்சினை இல்லை; இது நாடு தழுவியது.

* போராட்டம் நடத்தினாலே தடியடி நடத்த வேண்டும் என்பது அல்ல.

* இத்தகைய தருணங்களில் சுய கட்டுப்பாடு மிக முக்கியமானது

* அமைதியான முறையில் போராட மாணவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை தடுக்கக் கூடாது

* போராட்டங்களை மட்டுமே காரணம் காட்டி காவல்துறை தடியடி நடத்துவதை நியாயப்படுத்த முடியாது

* போராட்டம் என்ற பெயரில் சமூக விரோதச் செயல்கள் அல்லது வன்முறைகள் நிகழ்ந்தால் மட்டுமே காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

* மாணவர்கள் மீது அதிகப்படியான பலத்தைப் பிரயோகிப்பதை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட அனைத்து மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெறுகிறது.

====================