Supreme Court orders interim stay on uploading court proceedings to social media google
இந்தியா

நீதிமன்ற விசாரணைகள் : சமூக வலைதளங்களில் பதிவேற்ற இடைக்கால தடை : உச்சநீதிமன்றம் உத்தரவு..!

நீதிமன்ற விசாரணையில் தேவையற்ற ஒலி மற்றும் காணொலிகளை பதவியேற்றுவதற்கு உச்சநீதிமன்றமானது இடைக்கால தடையானது விதிக்கப்பட்டுள்ளது

Rohini

உச்சநீதிமன்றம், தேவையற்ற ஒலி , காணொலிகளை பதிவியேற்ற தடை

நீதிமன்ற விசாரணைகளின் நேரலை வீடியோக்கள் , ஒலி பதிவுகள் ஆகியவற்றை அனுமதியின்றி பதிவு செய்து, எடிட் செய்து சமூக வலைதளங்களில் பரப்புவதற்கு எதிரான வழக்கு,

தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்ற விசாரணையின் போது தேவையற்ற காணொலிகள் , ஒலி பதிவுளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்ற கூடாது என உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது

நீதிமன்ற உத்தரவை பதிவு செய்து , தேவையற்றவைகளுக்காக பயன்படுத்த கூடாது

மேலும் இந்த உத்தரவில் , நீதிமன்ற உத்தரவில் தேவையற்ற காணொலி , ஒலி பதிவுகளை பதிவேற்ற கூடாது என்று அவற்றை வைத்து தேவையற்ற பணம் திரட்டவோ , வணிக ரீதியாகவே ஈடுபடக்கூடாது எனவும் தெளிவுப்படுடத்தியுள்ளது.

வழக்கு அமர்வில் நீதிமன்றங்கள் தெரிவித்துள்ளதாவது

ஒரு இடைக்கால நடவடிக்கையாக, இந்த நீதிமன்றத்தின் பொதுச் செயலாளர் அல்லது அதிகார வரம்புக்குட்பட்ட உயர் நீதிமன்றங்களின் பதிவாளர் முன் அனுமதியின்றி, நீதித்துறை நடவடிக்கைகளின் ஒலி - ஒளிப் பதிவுகளை சமூக ஊடகங்கள் அல்லது பிற டிஜிட்டல் தளங்களில் பதிவிடுதல், பகிர்தல், மறுபதிவிடுத எடிட் செய்தல்,மாற்றியமைப்பது, பணமாக்குதல் ஆகியவை செய்யப்படக்கூடாது என்று உத்தரவிடப்படுகிறது.

இது நீதிமன்றத்தின் 24 மணி நேர பொழுதுபோக்கு சேனலாக இருக்க முடியாது. என அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சிஜேபி கட்சி உருவானதே , தான் கூறிய கருத்தே,நீதிபதி வருத்தம் தெரிவிப்பு

விசாரணையி்ன் போது பேசிய தலைமை நீதிபதி சூர்ாயகாந்த், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் குறித்து தான் கூறிய கருத்துகளை ஊடகங்கள் திரித்து வெளியிட்டதால் தேவையற்ற விமர்சனங்கள் எழுந்ததாக வருத்தம் தெரிவித்தார்.

வழக்கமான செய்து சேகரிப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது

இந்த அறிவிப்பானது , வழக்கமான ஊடகங்களின் செய்தி சேகரிப்பைக் கட்டுப்படுத்தாது என்றும், பத்திரிகையாளர்கள் வழக்கம் போல நீதிமன்றச் செய்திகளைச் சேகரிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

இந்த உத்தரவின் நகல் இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

=====================