திரிணாமூல் - மம்தா பானர்ஜி
பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத மேற்கு வங்கத்தில், 15 ஆண்டுகளாக கோலோச்சியவர் மம்தா பானர்ஜி, கம்யூனிஸ்ட் கோட்டையான மேற்கு வங்கத்தை 2011ம் ஆண்டு திரிணாமூல் கைப்பற்ற காரணமாக இருந்தவர் மம்தா பானர்ஜி.
மேற்கு வங்கத்தில் பாஜக
மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்ற பாஜக அதற்கான முனைப்புகளில் தீவிரம் காட்டியது. ஒரு காலத்தில் மேற்குவங்க சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 3 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர்.
இந்த எண்ணிக்கை கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 77 எம்எல்ஏக்களாக உயர்ந்தது. தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் 207 பாஜக எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். 9 மாவட்டங்களில் திரிணமூல் காங்கிரஸ் துடைத்து எறியப்பட்டு உள்ளது.
அசுர பலத்துடன் இருக்கும் பாஜக சுதந்திர இந்திய வரலாற்றில், மேற்கு வங்கத்தில் முதன்முறையாக ஆட்சி அமைத்தது பாஜக.
மேற்கு வங்க தேர்தல் முடிவுகள்
மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 4-ம் தேதி எண்ணப்பட்டன. முடிவுகள் அறிவிக்கப்பட்ட 293 தொகுதிகளில் பாஜக 207 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. திரிணமூல் காங்கிரஸுக்கு 80 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன.
பதவி விலக மறுத்த மம்தா
பதவி விலக மறுத்த மம்தா, தேர்தல் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டினார். ஆனால், ஆளுநர் ரவி சட்டப்பேரவையின் பதவிக் காலத்தை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
சட்டசபை தலைவராக சுவேந்து அதிகாரி
இதைத் தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேலிட பார்வையாளராக பங்கேற்றார். இந்த கூட்டத்தில் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக சுவேந்து அதிகாரி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
யார் இந்த சுவேந்து அதிகாரி?
ஒரு காலத்தில் மம்தா பானர்ஜியின் உதவியாளராக இருந்தவர் சுவேந்து அதிகாரி. இடதுசாரிகள் ஆட்சியில் நந்திகிராம் போராட்டங்களை தலைமையேற்று வழிநடத்தியவர்.
மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்த இவர், 2009ல் திரிணாமுல் சார்பாக மக்களவை எம்பியானார். 2020ல் கருத்து வேறுபாடு காரணமாக திரிணாமூல் காங்கிரசில் இருந்து விலகிய சுவேந்து அதிகாரி, பாஜகவில் இணைந்தார்.
மம்தாவை தோற்கடித்த சுவேந்து
2021 சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா தோற்கடித்து, இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார் சுவேந்து அதிகாரி. 2026 சட்டமன்ற தேர்தலிலும் பவானிபூர் தொகுதியில் மம்தாவை மண்ணை கவ்வச் செய்தார் இவர்.
முதல்வரானார் சுவேந்து அதிகாரி
இந்தநிலையில், கொல்கத்தாவின் பிரிகேட் பரேடு மைதானத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி.
பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் மேற்குவங்கத்தின் புதிய முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்.
முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு
விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர் தோல்வியில் காங்கிரஸ்
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2014-ம் ஆண்டு ஆட்சி அமைத்தது. அதற்கு முன்பிருந்தே பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியைத் தழுவி வருகிறது.
21 மாநிலங்களில் பாஜக ஆட்சி
அதேசமயம், 12 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக இதுவரை 20 மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. மேற்கு வங்கத்தை சேர்த்து பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
=======