Tamil Nadu Population 8th Census 2026 2027 Begins Today: What Are the 33 Questions? Full Details in Tamil source : google
இந்தியா

தொடங்கியது 8-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு : 33 கேள்விகள் என்னென்ன? முழு விவரம்..!

Tamil Nadu Population Census 2026 - 2027 : தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் ஜூலை 17ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை சுயவிவர கணக்கெடுப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

S Kavitha

மக்கள் தொகை கணக்கெடுப்பு

Tamil Nadu Population Census 2026 - 2027 : 2027 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடங்கியுள்ளது.

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை

நாடு முழுவதும் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். 1947 ஆம் ஆண்டிற்கு பிறகில் இருந்து இதுவரை ஏழு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

2011 -ல் கடைசியாக எடுக்கப்பட்டது

கடைசியாக 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பிறகு 2021 ஆம் ஆண்டில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2021 -ல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

2027 ஆம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு

இந்நிலையில் தான் தற்போது 2027 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

முதற்கட்ட பணிகள் தொடக்கம்

அதன்படி மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணிகள் இன்று தொடங்கி உள்ளது.

இன்று முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை டெல்லி, கோவா, கர்நாடகா, ஒடிசா, சிக்கும், மிசோரம், அந்தமான் நிகோபார் தீவுகள், மற்றும் லட்சத் தீவுகளில் மக்கள் தொகை சுயவிவர கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

வீட்டுப் பட்டியல், விட்டுவசதி கணக்கெடுப்பு

அதன்பின்னர், ஏப்ரல் 16 ஆம் தேதிமுதல் மே மாதம் 15ஆம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப்பட்டியல்,வீட்டு வசதி கணக்கெடுப்பு நடத்தபடும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கணக்கெடுப்பு நடத்தப்படும் தேதி

தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் ஜூலை 17ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை சுயவிவர கணக்கெடுப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இதுதான் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் டிஜிட்டல் கணக்கெடுப்பாகும்.

முதல்முறையாக டிஜிட்டல் கணக்கெடுப்பு

ஏனெனில் இந்தமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமையாக இணையதளம் மூலமாகவே நடக்கிறது.

16 மொழிகளில் இணையதளம்

இதற்காக பிரத்யேகமாக தமிழ், கன்னடம்,மலையாளம், கேரளம்,தெலுங்கு, இந்தி, உருது,குஜராத்தி,மணிப்பூரி,மராத்தி உள்ளிட்ட பதினாறு மொழிகளில் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுயகணக்கெடுப்பு

இதன்மூலம் மக்கள் தாங்களாகவே சுயகணக்கெடுப்பு இணையதளத்தில் செல்போன் எண் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முடியும். சுயவிவரம் பதிவு செய்தவுடன் 16 இலக்க அடையாள எண் வழங்கப்படும்.

16 இலக்க எண்

மக்கள் தொகை கணக்கெடுப்பாளர் உங்கள் வீட்டிற்கு நேரடியாக வரும் போது இந்த 16 இலக்க எண்ணை வழங்கினால் போதுமானது. வேறு எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேணியதில்லை.

உங்கள் தகவல்கள் அனைத்தும் கணக்கெடுப்பாளர்களால் மொபைல் செயலியில் பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது கேட்கப்பட உள்ள 33 கேள்விகள் கேட்கப்பட உள்ளது.

இந்த 33 கேள்விகளும் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் 6 பிரிவுகளில் கீழே தரப்பட்டுள்ளது.

1. கட்டிடத்தின் கட்டமைப்பு

அடையாள எண்கள்:நகராட்சி எண் மற்றும் கணக்கெடுப்பு வீட்டு எண்.

கட்டுமானப் பொருட்கள்: தரை, சுவர் மற்றும் கூரை எதனால் ஆனது (சிமெண்ட், செங்கல், காங்கிரீட் போன்றவை).

தன்மை: வீட்டின் பயன்பாடு (வீடு/கடை) மற்றும் தற்போதைய நிலை (நல்லது/பழுது).

2. குடும்பத் தலைவரின் விபரங்கள்

அடையாளம்: பெயர், பாலினம் மற்றும் மொபைல் எண்.

சமூகப் பின்னணி: சாதியப் பிரிவு (SC/ST/இதர).

எண்: மக்கள் தொகை கணக்கெடுப்பு குடும்ப எண்.

3. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இடவசதி

எண்ணிக்கை: மொத்த உறுப்பினர்கள் மற்றும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை.

வாழிடம்: சொந்த வீடா/வாடகையா மற்றும் பயன்பாட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை.

4. அடிப்படை வசதிகள்

நீர் மற்றும் மின்சாரம்: குடிநீர் ஆதாரம், அது இருக்கும் இடம் மற்றும் மின்சார வசதி.

சுகாதாரம்: கழிப்பறை வசதி (உள்ளதா/வகை/கழிவுநீர் வெளியேற்றம்) மற்றும் குளியலறை வசதி.

உணவு மற்றும் சமையல்: சமையலறை வசதி, எரிபொருள் (LPG/PNG), மற்றும் குடும்பத்தின் முக்கிய தானிய வகை (உணவு).

5. தகவல் தொடர்பு மற்றும் மின்னணு சாதனங்கள்

பொழுதுபோக்கு:ரேடியோ மற்றும் தொலைக்காட்சி.

டிஜிட்டல் வசதி: இணையம், கணினி/லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு.

6. போக்குவரத்து வாகனங்கள்

இருசக்கர வாகனங்கள்: மிதிவண்டி, ஸ்கூட்டர் அல்லது மோட்டார் சைக்கிள்.

நான்கு சக்கர வாகனங்கள்: கார், ஜீப் அல்லது வேன்.

====