Pawan Kalyan on Temple lands encroachment 
இந்தியா

ஜெகன் ஆட்சியில் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு : பவன் கல்யாண்

Pawan Kalyan on Temple Land : ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்தார்.

MTM

Pawan Kalyan on Temple Land Encroachment : ஆந்​திர மாநிலம் பிர​காசம் மாவட்​டம், நரசிம்​மாபுரத்​தில் குடிநீர் திட்​ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட துணை முதல்வ்ர பவன் கல்யாண பேசி​ய​தாவது: மீண்டும் ஆட்​சிக்கு வந்​ததும் எங்​களை ஒரு கை பார்ப்​போம் என முன்​னாள் முதல்​வர் ஜெகன்(Jagan Mohan Reddy) அடிக்​கடி மிரட்டி வரு​கிறார். சக மனிதர்​களை இப்படி மிரட்​டிய​தால்​தான் தனக்கு இந்த நிலைமை என்​பதை அவர் இன்​ன​மும் உணர்ந்து கொள்​ள​வில்​லை.

மத்​திய அரசின் ஜல்​ஜீவன் திட்ட நிதியை முந்​தைய அரசு பயன்​படுத்​த​வில்​லை. ஆனால் நாங்கள் மத்​திய அரசுடன் பேச்​சு​வார்த்தை நடத்​தி​யதை தொடர்ந்து ஜல்​ஜீவன் திட்​டத்​தின் கீழ் முதல்​கட்​ட​மாக ரூ.1,290 கோடி​யில் இத்​திட்​டத்​துக்கு அடிக்​கல் நாட்​டப்​பட்​டுள்​ளது. இதன் மூலம் 10 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மக்​கள் பயன் அடை​வார்​கள்.

இந்தப்பகுதியில் உள்ள அருள்மிகு லட்​சுமி சென்​னகேசவுலு கோயில் உட்பட பல்​வேறு கோயில்​களின் நிலங்​களை ஜெகன் ஆட்​சி​யில் அவரது கட்​சி​யினர் ஆக்​கிரமிப்பு செய்​துள்​ளனர். இந்த நிலங்​களை மீட்க தனி கமிட்டி அமைக்​கப்​படும். அதன் மூலம் கோயில் நிலங்​கள் அனைத்​தும் மீட்​கப்​படும்.

இவ்​வாறு பவன்​ கல்​யாண்​ பேசி​னார்​.