சுங்கச்சாவடிகளில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள்
toll gates இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள், விரைவு சாலைகளை மேலாண்மை செய்யக்கூடிய நிறுவனங்களுக்கு வாகன ஓட்டிகள் சுங்க கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது. இந்த சுங்க கட்டணம் செலுத்தும் நடைமுறையில் நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
மத்திய அரசின் புதிய முயற்சி
பொதுவாக சுங்கச்சாவடிகளில் நாம் வாகனத்தை நிறுத்தி பணத்தை கொடுத்து மீதி சில்லறை வாங்க வேண்டும் என்று அவசியமே கிடையாது. தானாகவே நம்முடைய வாகனத்தில் இருக்கும் ஃபாஸ்டேக் ஸ்கேன் செய்யப்பட்டு சுங்க கட்டணம் தானாகவே வசூல் செய்யப்பட்டு விடும்.
இதன் காரணமாக சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கக்கூடிய நேரம் வெகுவாக குறைந்திருக்கிறது. இந்த சூழலில் தான் மத்திய அரசு வரும் 15ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை தொடங்கி சுங்க கட்டண வசூல் விதிமுறையில் ஒரு முக்கியமான மாற்றத்தை நடைமுறைக்கு கொண்டு வருகிறது.
பாதி கட்டணம் வசூல் செய்யப்படும்
அது என்ன என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் இந்த புதிய மாற்றத்தின் மூலம் உங்களுக்கான சுங்க கட்டணம் கணிசமான அளவு குறைய உள்ளது. இதன்படி நீங்கள் ஒரு விரைவு சாலையில் பயணம் செய்கிறீர்கள் அந்த சாலை இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்கே வரவில்லை. பாதி கட்டுமான முடிந்திருக்கிறது, பாதி கட்டுமானம் நடந்து கொண்டிருக்கிறது அதில் கட்டுமான முடிந்த ஒரு பகுதி அளவு சாலையில் தான் நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றால் அந்த முழு சாலைக்குமான சுங்க கட்டணத்தை நீங்கள் செலுத்த தேவையில்லை. குறைந்தபட்ச சுங்க கட்டணத்தை(தேசிய நெடுஞ்சாலைக்கு வசூல் செய்யப்படும் கட்டணம்) மட்டுமே இனி வசூல் செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதி வேளை உள்ள சாலைகளில் பாதி சுங்ககட்டணம்
பிப்ரவரி 15 ஆம் தேதியிலிருந்து இந்த புதிய விதிமுறை நடைமுறைக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை கட்டணம் நிர்ணயம் மற்றும் வசூல் 2008 விதிகளை இதற்காக மத்திய அரசு திருத்தி அமைத்துள்ளது. இந்த புதிய விதிமுறையின் கீழ் ஒரு தேசிய விரைவுச் சாலை தொடக்கத்திலிருந்து இறுதிவரை முழுமையாக திறக்கப்படாமல் இருக்கிறது எனும் போது பகுதி அளவு சுங்க கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும். இதுவரை பல இடங்களில் பகுதி அளவு முடிக்கப்பட்ட விரைவு சாலைகளில் கூட முழு சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டது. இது வாகன ஓட்டிகளுக்கு பெரிய அளவில் சுமையை ஏற்படுத்தியது. ஆனால் இந்த புதிய விதிமுறை நிம்மதி தந்துள்ளது.
விரைவு சாலைகளில் அதிக சுங்க கட்டணம் வசூல் செய்யும் சூழல்
இதன் மூலம் விரைவுச் சாலையின் செயல்பாட்டு பகுதிகளை பயன்படுத்த அதிகமான வாகன ஓட்டிகள் முன் வருவார்கள். இதனால் பழைய தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் மற்றும் சரக்கு வாகனங்கள் இந்த விரைவு சாலைகளை நோக்கி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான தேசிய நெடுஞ்சாலைகளை காட்டிலும் விரைவு சாலைகளில் 25 சதவீதம் அதிகமாக தான் சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
25 சதவிகிதம் குறைவு கட்டணம் வசூல்
பெரும்பாலான விரைவு சாலைகள் இன்னும் பணி முடிந்து பயன்பாட்டுக்கே வராத சூழலிலும் சுங்க கட்டணத்தை முழுமையாக வசூல் செய்கிறார்கள் இந்த புதிய விதிமுறை அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. எனவே விரைவுசாலை முழுமையாக செயல்பாட்டுக்கு வராத போது உதாரணத்திற்கு சென்னை பெங்களூரு விரைவு சாலையில் முடிக்கப்பட்ட பகுதிகளை பயன்படுத்தும் போது முன்பை விட 25% குறைவாக கட்டணம் செலுத்தினால் போதும் என்று தகவல் வெளிவந்துள்ளது.