ஆட்டோ மொபைல் நிறுவனம் கோரிக்கை
central government traffic rules மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அடுத்து ஆண்டு ஜனவரி முதல் தயாரிக்கப்படும் அனைத்து புதிய இருசக்கர வாகனங்களுக்கும் ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டத்தை மத்திய போக்குவரத்து அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது.
இந்த கட்டுப்பாட்டை முழுவதும் தளர்த்தவேண்டும் என்று ஆட்டோ மொபைல் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.
கோரிக்கைகளை மறுத்த மத்திய அரசு
ஆனால் மத்திய அரசு இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. அதாவது, வாகனங்களுக்கு இந்த ஏபிஎஸ் முறையே முறையான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்று எஞ்சின் திறன் பாராமல் அனைத்து வகை இருசக்கர வாகனங்களுக்கும் பொருந்தும், அதனால் ஏபிஎஸ்ஸை மத்திய அரசு கட்டாயப்படுத்தியுள்ளது.
ஏபிஎஸ் சிஸ்டத்துடன் இரண்டு தலைக்கவசம் கட்டாயம்
ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் மேலும், இருசக்கர வாகனங்களை வாங்கும் போது, இந்திய தர நிர்ணய அமைப்பின் (BIS) பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க இரண்டு தரமான தலைக்கவசங்களை (ஹெல்மெட்) உற்பத்தியாளர்கள் கட்டாயமாக வழங்க வேண்டும் என்றும் அமைச்சகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
ஜனவரி 1 முதல் கட்டாயம்
"2026 ஜனவரி 1 ஆம் தேதி மற்றும் அதற்குப் பிறகு உற்பத்தி செய்யப்படும் அனைத்து மாடல் L2 வகை வாகனங்களும் IS14664:2010 தரநிலைக்கு இணங்க ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டத்துடன் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
ஆண்டிலாக் பிரேக்கிங்கின் சிஸ்டத்தின் பயன்
ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் என்பது திடீரென பிரேக் பிடிக்கும்போது சக்கரங்கள் பூட்டப்படுவதைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு அம்சமாகும். இது வாகனங்கள் சறுக்குவதையும், விபத்துக்குள்ளாவதையும் கணிசமாகக் குறைக்கிறது.
சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்த வழிமுறை
அதாவது அரசு தரப்பில் சமீபத்திய தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் நிகழ்ந்த 1,51,997 சாலை விபத்துக்களில் கிட்டத்தட்ட 20% இருசக்கர வாகனங்கள் சம்பந்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய விதிமுறைகள் சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நெகட்டிவ் புள்ளிகள் ஏறினால் லைசன்ஸ் ரத்து
புதிய ஆட்டோமொபைல் விதிகள் அதேபோல் சாலை விதிமீறல்களை தடுக்கும் விதமாக ஓட்டுநர் உரிமங்களுக்கு 'எதிர்மறை புள்ளிகள் முறையை' அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது நெகட்டிவ் பாயிண்ட்ஸ் முறை.
பல நெகட்டிவ் புள்ளிகளைப் பெறும் ஓட்டுநர்களின் உரிமை இடைநீக்கம் அல்லது ரத்து செய்யப்படும். அதாவது நீங்கள் ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுகிறீர்கள், சீட் பெல்ட் இல்லாமல் வாகனம் ஓட்டுகிறீர்கள் என்றால் அதற்கு ஒரு நெகட்டிவ் புள்ளி வழங்கப்படும்.
இடைக்காலமாக லைசென்ஸ் ரத்து
இப்படி உங்கள் தவறுகளுக்கு ஏற்ப உங்களுக்கு நெகட்டிவ் புள்ளிகள் வழங்கப்படும். இந்த நெகட்டிவ் புள்ளிகள் ஒரு குறிப்பிட்ட மதிப்பை தாண்டும் போது உங்கள் லைசன்ஸ் இடைக்காலமாக நீக்கம் செய்யப்படும்.
விதி மீறல்கள் அதிகரிக்கும் பட்சத்தில் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்று அரசு தரப்பில் இந்த புதிய விதிமுறைகள் வெளிவந்துள்ளது.
=====