The Corporation administration has sealed the residence of former Chief Minister Jayalalithaa:  source : google
இந்தியா

வரி நிலுவை புகார் : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஹைதராபாத் வீடு : சீல் வைத்த மாநகராட்சி நிர்வாகம்!

வரி நிலுவை புகார் காரணமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டிற்கு மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

S Kavitha

The Corporation administration has sealed the residence of former Chief Minister Jayalalithaa:

ஜெயலலிதாவின் ஐதராபாத் வீடு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஹைதராபாத்தில் ஸ்ரீநகர் காலனியில் நான்கடுக்கு மாடிகள் கொண்ட வீடு ஒன்று உள்ளது.

இந்த வீட்டை ஜெயலலிதா அலுவலகமாகவும் பயன்படுத்தி வந்தார். மேலும் இது அவரது தனிப்பட்ட சொத்துக்களில் ஒன்றாகவும் அறியப்படுகிறது.

2017 முதல் சொத்து வரி செலுத்தவில்லை

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில் 2017 ஆம் ஆண்டுமுதல் அந்த வீட்டிற்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை அவரது உறவினர்கள் யாரும் செலுத்தவில்லை என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜெயலலிதாவின் உறவினரான தீபக் என்பவர், இந்த வீட்டை அலுவலக கட்டடத்தில் இருந்து குடியிருப்பு வகைக்கு மாற்றித்தர வேண்டும் என 2017 ஆம் ஆண்டு மனு அளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

வீட்டிற்கு சீல் வைப்பு

எனினும் 2017 முதல் இதுநாள் வரை முறையான சொத்துவரியானது செலுத்தப்படாததாலும் , மாகராட்சி நிர்வாகம் ஜெயலலிதாவின் உறவினர்களுக்கு நோட்டிஸ் அனுப்பியும் எந்த பதிலும் இல்லாததாலும் ஜெயலலிதாவின் ஹைதராபாத் இல்லைத்தை மூடி சீல் வைப்பதாக ஹைதராபாத் மாநகராட்சியின் துணை ஆணையர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே சென்னை போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவிற்கு சொந்தமான 'வேதா நிலையம்' அரசுடைமையாக்கப்பட்ட நிலையில், தற்போது ஹைதராபாத் இல்லம் வரி பாக்கி காரணமாக சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

====