The Election Commission has stated that 2.73 crore Gen Z youths have been added to the electoral roll source:thamizhalai,ai generated
இந்தியா

SIR : ”புதிதாக 2.73 கோடி ஜென்-ஸி இளைஞர்கள் சேர்ப்பு” : வாக்காளர் பட்டியல், அதிகாரிகள் தகவல், முழு விவரம்...!

2025-ம் ஆண்​டில் எஸ்​ஐஆர் பணி​யை தொடங்கியதிலிருந்​து, 2.73 கோடி ஜென் ஸி இளைஞர்​கள் வாக்காளர் பட்​டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Kannan

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு

1950ம் ஆண்டு மக்​கள் பிர​தி​நி​தித்​து​வச் சட்​டத்​தின் பிரிவு 14-ல் 2021-ம் ஆண்டு செய்​யப்​பட்ட திருத்​தம் மற்​றும் பிரிவு 19-ன் படி, ஜனவரி1, ஏப்​ரல் 1, ஜூலை 1 அல்லது அக்​டோபர் 1 ஆகிய தேதி​களில் 18 வயதை பூர்த்தி செய்யும்,,,

அல்​லது ஏற்​கெனவே 18 வயதை அடைந்த எந்த நபரும், எந்​தவொரு திருத்​தப் பணிக்​காக​வும் காத்​திருக்​காமல், வழக்கமான வாக்​காளர் பட்​டியல் புதுப்​பிப்பு நடை​முறை​யின் கீழ் வாக்​காள​ராகப் பதிவு செய்ய விண்​ணப்​பிக்​கலாம்.

எஸ்ஐஆர் பணிகள் - பெயர்கள் சேர்ப்பு

எஸ்​ஐஆர் கால​கட்​டத்​தி​லும் 18-28 வயதுடைய​வர்​களில் 2.73 கோடி பேர் வாக்​காளர் பட்​டியலில் சேர்க்​கப்​பட்​டிருப்​பது, இளம் வாக்காளர்​களின் பதிவு தொடர்ந்து நடை​பெற்​றதற்​கான சான்றாக உள்ளது.

இதன்மூலம் வருங்காலங்களில் இந்தியாவின் அரசியலை நிர்ணயிக்கும் மிகப்பெரிய சக்தியாக இளைஞர் சமுதாயம் இருக்க போவது உறுதியாகி இருக்கிறது.

பெயர் சேர்க்க படிவம் 6

புதிய வாக்காளர்கள் பெயர்களைச் சேர்க்க படிவம் 6 பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தகுதியான இளைஞர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து இணைத்து வருகின்றனர்.

தேர்தல் ஆணையத்தின் தொடர்ச்சியான வாக்காளர் பட்டியல் புதுப்பிப்புப் பணிகள் மற்றும் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் மூலம் இந்த இளைய தலைமுறை வாக்காளர்களின் சேர்க்கை தடையின்றி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

=============