The first phase of the 2027 Census begins the day after tomorrow (April 1) google
இந்தியா

Population Census : மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை மறுநாள தொடக்கம் : 2ம் கட்டத்தில் சாதி விவரங்கள் சேகரிப்பு!

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முதற்கட்டம் நாளை மறுநாள் ( ஏப்ரல் 1ம் தேதி ) தொடங்குகிறது.

Kannan

மக்கள்தொகை கணக்கெடுப்பு

Census 2027 India Self enumeration April 1, Caste enumeration to be conducted in Phase 2 : இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் 69-வது வரிசையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் அதிகாரப் பட்டியலில் (Union Subject) உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 16ம் தேதி, 2027 கணக்கெடுப்பை நடத்துவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

2 கட்டங்களாக பணிகள்

டெல்லியில் செய்தியாளர் சந்தித்த இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் மிருத்யுஞ்சய் குமார் நாராயண், இந்த தேசிய அளவிலான இந்தப் பணி இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட இருப்பது பற்றி விளக்கினார்.

ஆன்லைனில் பதிவு

அதன்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் பதிவு மூலம் தொடங்குகிறது. பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து இணையதளம் வாயிலாக விவரங்களைப் பதிவு செய்யும் 'சுய-கணக்கெடுப்பு' முறை தொடங்குகிறது.

அதிகாரிகள் விவரம் சேகரிப்பார்கள்

இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 16 முதல் கணக்கெடுப்பு அதிகாரிகள் நேரில் வீடு வீடாகச் சென்று தகவல்களைச் சேகரிப்பார்கள்.

முதல் கட்டம் (வீடுகள் பட்டியல்)

இதில் வீட்டின் நிலை, குடும்ப விவரங்கள், குடிநீர், கழிப்பறை, மின்சாரம், சமையல் எரிபொருள், இணையம் போன்ற வசதிகள் மற்றும் ரேடியோ, டிவி, கணினி, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் போன்ற சொத்துக்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும்.

இரண்டாம் கட்டம் (மக்கள் தொகை கணக்கீடு):

இதில் நபர்களின் எண்ணிக்கை, பெயர், வயது, பாலினம், திருமண நிலை, சாதி, மதம், கல்வி, மொழி, ஊனம், இடம்பெயர்வு, தொழில் மற்றும் திருமணமான பெண்களின் மகப்பேறு விவரங்கள் சேகரிக்கப்படும்.

நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், 784 மாவட்டங்கள் மற்றும் சுமார் 6.4 லட்சம் கிராமங்களை இந்தக் கணக்கெடுப்பு உள்ளடக்கும்.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (NPR) புதுப்பிப்பது குறித்துக் கேட்டபோது, தற்போது வரை அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று நாராயண் பதிலளித்தார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியப் பதிவாளர் ஜெனரல் அலுவலகம் (RGI) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மார்ச் 1, 2027 கணக்கெடுப்புத் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லடாக், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களின் பனிப்பொழிவு உள்ள பகுதிகளுக்கு அக்டோபர் 1, 2026 கணக்கெடுப்புத் தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

====