The Indian team has the distinction of being the first women's cricket team to be nominated for laureus award google
இந்தியா

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி : லாரஸ் உயர் விருதுக்கு பரிந்துரை!

Indian Women Cricket Team : சிறந்த அணிக்​கான பிரிவுக்கு பரிந்​துரை செய்​யப்​பட்ட முதல் மகளிர் கிரிக்​கெட் அணி என்ற பெரு​மையை பெற்​றுள்​ளது இந்​திய அணி.

Rohini

விளையாட்டிற்கான உயரிய விருது

Indian Women Cricket Team : விளையாட்டு உலகின் மிக உயர்ந்த விருதாக லாரஸ் விருதும் கருதப்படுகிறது. அந்த வகையில் இந்​திய மகளிர் கிரிக்​கெட் அணி​யின் பெயர் இந்த விருதுக்கு பரிந்​துரை செய்​யப்​பட்​டுள்​ளது குறிப்பிடத்தக்க முக்கியமான ஒன்றாகும்.

பெருமையை பெரும் இந்திய மகளிர் அணி

அதன்படி சிறந்த அணிக்கான தகுதியில் இந்திய மகளிர் அணி தேர்நதெடுக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.விருதுக்கான பரிந்துரைக்கு செல்லும் முதல் இந்திய மகளிர் அணி இதுவேயாகும் .

அதிகாரபூர்வ அறிவிப்பு

அதன்படி இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானாது ஸ்பெ​யினின் மாட்​ரிட் நகரில் நேற்று நடை​பெற்​றது.இது முற்றிலுமாக மகளிர் அன்னிக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதப்படுகிறது

விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட பிற அணிகள்

சிறந்த அணிக்​கான விருதுக்கு இந்​திய மகளிர் அணி​யுடன் சேர்த்து இங்​கிலாந்து மகளிர் கால்​பந்து அணி, ஐரோப்​பிய ரைடர் கோப்பை அணி, பாரிஸ் செயின்ட் ஜெர்​மைன் கிளப் கால்​பந்து அணி, மெக்​லாரன் பார்​முலா 1 அணி ஆகிய​ அணிகளும் பரிந்​துரை செய்​யப்​பட்​டுள்​ளது

அறிவிப்பு தேதி

இந்த விரு​தின் வெற்​றி​யாளர் வரும் ஏப்​ரல் 20-ம் தேதி மாட்​ரிட்​டில் நடை​பெறும் விழா​வில் அறிவிப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.விளையாட்டு உலகின் மிக உயர்ந்த விருதாக லாரஸ் விருதும் கருதப்படுகிறது.

அந்த வகையில் இந்​திய மகளிர் கிரிக்​கெட் அணி​யின் பெயர் இந்த விருதுக்கு பரிந்​துரை செய்​யப்​பட்​டுள்​ளது குறிப்பிடத்தக்க முக்கியமான ஒன்றாகும்.

==========