The NEET exam, which was held across the country on May 3, has been cancelled.  google
இந்தியா

மே 3 தேதி:நாடு முழுவதும் நடைப்பெற்ற மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வானது ரத்து செய்யப்பட்டுள்ளது

பல இடங்களில் வினாத்தாள் கசிந்த புகாரை அடுத்து தேர்வானது ரத்து செய்யப்படு என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது .

Rohini

நீட் தேர்வு 2026

மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான 'நீட்' (NEET) நாளை மே 3-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் . இத்தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (NTA) நடத்தியது

நாடு முழுவதும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மாணவ-மாணவியர் இத்தேர்வை எதிர்கொண்டனர்

இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசியத் தேர்வுகளை நியாயமான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான முறையில் நடத்துவதில் தேசிய தேர்வு முகமை கொண்டுள்ள உறுதிப்பாட்டுக்கு இணங்க,

மே 3ம் தேதி நடந்த நீட் தேர்வு தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் தொடர்பாக சுயாதீனமான சரிபார்ப்பு மற்றும் தேவையான நடவடிக்கைகளுக்காக மத்திய முகமைகளுக்கு தேசிய தேர்வு முகமை கடந்த 8ம் தேதி பரிந்துரை செய்திருந்தது என்று குறிப்பிட்டிருந்தது

தேர்வு ரத்து குறித்து தெர்வு முகமை தெரிவித்துள்ளது

மத்திய முகமைகளுடன் ஒருங்கிணைந்து தேசிய தேர்வு முகமை மேற்கொண்ட ஆய்வுத் தகவல்கள் மற்றும் சட்ட அமலாக்க முகமைகளால் பகிரப்பட்ட விசாரணை முடிவுகளின் அடிப்படையில், மே 3 ஆம் தேதியன்று நடத்தப்பட்ட NEET (UG) 2026 தேர்வை ரத்து செய்யவும், தனியாக அறிவிக்கப்படும் தேதிகளில் அத்தேர்வை மீண்டும் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.

வினாத்தாள் கசிவு : CBi விசாரணைக்கு பரிந்துரை

இவ்விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்வதற்காக, இதனை மத்தியப் புலனாய்வுத் துறைக்கு (CBI) பரிந்துரைக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. அத்துறையின் விசாரணைக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும், உதவிகளையும் தேசிய தேர்வு முகமை வழங்கி முழு ஒப்புத்ல் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கபட்டுள்ளது

அதிர்ச்சியில் மாணவர்கள்

இந்த நிலையில் 12 வகுப்பு தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் . இது மாணவர்களிடையே பெரும் அதிர்வை எற்படுதியிருகிறது

கட்டணத்தை திருப்பி செலுத்த வேண்டாம்

இது குறிது தேர்வு முகமைகள் வெளியிடுள்ல அறிக்கையின்படி , மாணவர்கள் மறு தேர்விற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கவோ அல்லது கட்டணத்தை திருபி செலுத்தவோ தேவையில்லை என்று தேசிய முகமைகள் தேர்வு தெறிவித்துள்ளது

2026 மே மாதத் தேர்வுச் சுழற்சியின்போது பதிவு செய்யப்பட்ட விவரங்கள், தேர்வர்களின் தகுதிநிலை மற்றும் அவர்களால் தேர்வு செய்யப்பட்ட தேர்வு மையங்கள் ஆகியவை, மீண்டும் நடத்தப்படவுள்ள தேர்வுக்கும் அப்படியே எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது

============